இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஒரு மாற்றத்துடன் களமிறங்க போகும் இந்திய அணி இதுதான் ; ப்ளேயிங் 11 விவரம் இதோ ;

இப்பொழுதெல்லாம் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சீரியஸ் போட்டிகள் நடந்து சிறிது நாட்கள் கூட ஆகாத நிலையில் இப்பொழுது இலங்கை அணிக்கு எதிரான போட்டிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் களமிறங்கிய முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஷானக்க தலைமையிலான இலங்கை அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 199 ரன்களை அடித்துள்ளது இந்திய அணி. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது இலங்கை அணி. ஆனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை என்பது தான் உண்மை. ஆனால் இறுதி ஓவர் வரை போராடிய இலங்கை அணியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 137 ரன்களை அடித்துள்ளது இலங்கை.

அதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது இந்திய. அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது இந்திய. இந்திய கிரிக்கெட் அணி அதிபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது. அதனால் பெரும்பாலும் இந்த நிலையில் அணியில் மாற்றம் நடப்பது மிகவும் கடினம் தான். ஆனால் நீண்ட ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெற்றும் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காமல் வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அனைத்து விதமான உள்ளூர் போட்டிகளிலும் அதிக ரன்களை அடித்த ஒரே வீரர் ருதுராஜ். ஆனால் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைப்பதே இல்லை. ஆமாம்..! அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பல கருத்துக்கள் பரவலாக சமுகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆவது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிரங்குவார் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அவருக்கு சில காயம் இருப்பதால் முதல் போட்டியில் விளையாட முடியாது என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஆனால் அடுத்த போட்டியில் நிச்சியமாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் ரோஹித் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற இரு வீரர்களும் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் ரோஹித் சர்மா வாய்ப்பு கொடுப்பாரா ?? இல்லையா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.