வீடியோ ; வேற லெவல் கேட்ச் பிடித்த சிஎஸ்கே அணியின் ஆல்- ரவுண்டர் ஜடேஜா….! வைரலாகும் பதிவு….!

வீடியோ ; வேற லெவல் கேட்ச் பிடித்த சிஎஸ்கே அணியின் ஆல்- ரவுண்டர் ஜடேஜா….! வைரலாகும் பதிவு….!

மேட்ச் 8; நேற்று நடந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதுவரை இந்த இரு அணிகளும் இதுவரை 23 போட்டிகள் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளிலும் பஞ்சாப் கிங்ஸ் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 106 ரன்களை மட்டுமே அடித்துள்ளது. அதன்பிறகு 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15.4 ஓவர் முடிவில் 107 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

அதனால் புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் ஆல் – ரவுண்டரான ஜடேஜா பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன கிறிஸ் கெயில் விக்கெடின் போது அருமையாக கேட்ச் பிடித்தார். அதன் வீடியோ இப்பொழுது சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிஎஸ்கே அணியின் 4வது ஓவர் தீபக் சாகர் வீசிய பந்தை கிறிஸ் கெயில் அதனை எதிர்கொண்டார். அப்பொழுது கிறிஸ் கெயில் அடித்த பந்தை சிஎஸ்கே அணியின் ஆல் – ரவுண்டர் ஜடேஜா அசத்தலாக பறந்து கேட்ச் பிடித்துள்ளார். அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி முக்கியமான விக்கெட்டை இழந்தது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு மிகவும் மோசமான போட்டிகளை எதிர்கொண்ட சிஎஸ்கே அணிக்கு இது ஒரு நல்ல காம்பேக் என்று தான் சொல்ல வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது. இனிவரும் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றனர்.