வீடியோ ; தப்பு பண்ணிடையே சிங்காரம் …! என்னோட விக்கெட்டை அப்போவே எடுத்திருக்கனும்..! மாஸ் காட்டிய ஜடேஜா ..!

வீடியோ ; தப்பு பண்ணிடையே சிங்காரம் …! என்னோட விக்கெட்டை அப்போவே எடுத்திருக்கனும்..! மாஸ் காட்டிய ஜடேஜா ..!

ஐபிஎல் 2021 போட்டிகள் விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதேபோல விராட் கோலியிடம் கேட்ட போது அவர் பவுலிங் தான் எடுப்பேன் என்று கூறியுள்ளார். அதனால் இரு அணிகளும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப விளையாடினார். அதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 191 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் ருதுராஜ் கெய்கவாட் 33 ரன்கள், டுபலஸிஸ் 50 ரன்கள், சுரேஷ் ரெய்னா 24 ரன்கள், ராயுடு 14 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 62 ரன்களை விளாசியுள்ளார். பின்பு 192 ரன்களை எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெறும் 122 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதில் விராட் கோலி 8 ரன்கள், படிக்கள் 34 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 7 ரன்கள், மேக்ஸ்வெல் 22 ரன்கள், டிவில்லியர்ஸ் 4 ரன்களை விளாசியுள்ளார்.

69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதனால் புள்ளிப்பட்டியளில் 8 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. கடந்து ஆண்டு ஐபிஎல் போட்டியில் பல மோசமான தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே அணி, இந்த ஆண்டு மாஸ் காம்பேக் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இந்த போட்டியில் அதியடியாக விளையாடி இறுதி ஒரு ஓவரில் மட்டும் 37 ரன்களை விளாசியுள்ளார் ஜடேஜா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14வது ஓவரில் பேட்டிங் செய்யும்போது, வாஷிங்டன் சுந்தர் அந்த ஓவரில் பந்து வீசியுள்ளார். அதனை எதிர்கொண்ட ஜடேஜா சிக்ஸர் அடித்த போது பவுண்டரி லைனில் கேட்ச் பிடிக்க வேண்டிய பந்தை தவரவிட்டார் டேனியல் கிறிஸ்டியன். அதன்விளைவாக ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 28 பந்தில் 62 ரன்களை விளாசியுள்ளார்.

ஜடேஜா இறுதி ஓவரில் அடித்த 37 ரன்கள் ,வீடியோ இப்பொழுது சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ ;