ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் ஆரம்பித்து ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல திருபங்களுடன் இந்த ஆண்டு ஐபிஎல் 2020 சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 37 போட்டிகளில் முடிந்துள்ளது.
37வது போட்டி : மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களம் இறங்கிய சிஎஸ்கே ஓப்பனிங் பேட்ஸ்மேன் சாம் குரான் மற்றும் டுபலஸிஸ் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தவில்லை. சாம் குரான் 22 ரன்களிலும் , டுபலஸிஸ் 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.அதன்பின்னர் பேட்டிங் செய்த வாட்சன் 8 ரன்களிலும் ,ராயுடு 13 ரன்களிலும் , தோனி 28 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஆல்-ரவுண்டர் ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 35 ரன்கள் எடுத்துள்ளார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் எடுத்த நிலையில் 125 ரன்களை சேர்த்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அதன்பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் 19 ரன்களிலும் ,உத்தப்ப 4 ரன்களிலும் ,சாம்சன் 0 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஜோஸ் பட்லர் 70 ரன்களிலும் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களிலும் ஆட்டம் இழக்காமல் போட்டியில் வெற்றி பெற்றனர்.
15 பந்துகள் மீதமுள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் இழந்த நிலையில் ஆட்டத்தை வெற்றிபெற்றது ஸ்டீவ் ஸ்மித் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 2020யில் இறுதி இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. அதுமட்டுமின்றி 10 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இனி கேதர் ஜாதவுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காது….!!! ஏன் தெரியுமா???
கேதர் ஜாதவ் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் 50 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இனி வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எந்த அழுத்தமும் இருக்காது. ஏனென்றால் ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு மிக மிக குறைவு என்பதால். அதனால் வரும் போட்டிகளில் இளம் வீரர்களின் ஆட்டத்தை பார்க்க முடியும் என்று எதிர்பார்க்க படுகிறது