SRH அணிக்கு தொடரும் தோல்விகள்… ! ஏன் இன்னும் வில்லியம்சனுக்கு அணியில் இடமில்லை..!! காரணம் இதோ…!

SRH அணிக்கு தொடரும் தோல்விகள்… ! ஏன் இன்னும் வில்லியம்சனுக்கு அணியில் இடமில்லை..!! காரணம் இதோ…!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்ட நிலைமை , இந்த ஆண்டு சன்ரைஸ்சர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி சன்ரைஸ்சர்ஸ் ஐதராபாத் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியளில் இறுதி இடத்தில் உள்ளனர்.

இன்னும் இரண்டு போட்டி தோல்வியை சந்தித்தால் நிச்சியமாக ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழைவது மிகவும் கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி ஏன் இன்னும் வில்லியம்சன் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு என்ன ஆச்சு ??? போன்ற கேள்விகள் சமுகவலைத்தளங்களில் ரசிகர்கள் அவரவர் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் சன்ரைஸ்சர்ஸ் அணியின் போட்டியின் போது பெவிலியனில் அமர்ந்து இருப்பர். ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் ; கேன் வில்லியம்சன் முழங்கையை அடிபட்டு விட்டது அதனால் அவரால் சில போட்டிகளில் விளையாட முடியவில்லை.

ஆனால் நிச்சியமாக இன்னும் சில நாட்களில் அவர் போட்டியில் களமிறங்குவர் என்று கூறியுள்ளார். அதனால் சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர். அவர் வந்தால் ஆவது ஏதாவது போட்டியில் வெற்றி கிடைக்குமா ?? என்று எங்கிக்கொண்டு இருக்கின்றனர்.

வருகின்ற 14ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி. அந்த போட்டியில் ஆவது கேன் வில்லியம்சன் இடம்பெறுவரா…?? என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.