இவங்க இருவர் அணியில் இருக்கிறார்கள் ; கடந்த போட்டியை போலவே சிறப்பாக விளையாடுவார்கள் ; ஷிகர் தவான் ஓபன் டாக் ;

0

ஹாக்லே ஓவல் : இன்று காலை 7 மணி அளவில் தொடங்கிய போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதி விளையாடி வருகின்றனர்.

ஒருநாள் போட்டிக்கான தொடர் :

கடந்த 25ஆம் தேதி முதல் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வென்றுள்ளது நியூஸிலாந்து அணி. இரண்டாவது போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து இன்று மூன்றாவது ஒருநாள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி வழக்கம் போல் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்திய அணியின் ப்ளேயிங் 11 :

ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மன் கில், ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், உம்ரன் மாலிக், அர்ஷதீப் சிங், யுஸ்வேந்திர சஹால் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மூன்றாவது போட்டியின் நிலைமை :

முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் ஏற்படவில்லை. எதிர்பாராத வகையில் தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் விக்கெட்டை இழந்துள்ளனர். 13 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி 55 ரன்களை அடித்துள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி வென்று தொடரை ட்ரா செய்யுமா ?

டாஸ் -ல் தோல்வி பெற்ற பிறகு பேசிய ஷிகர் தவான் கூறுகையில் : “நாம் எப்பொழுதும் போட்டியில் விளையாடும் போது வெற்றிபெற வேண்டுமென்று தான் தொடங்க வேண்டும். நாங்க ட்ரெஸ்ஸிங் ரூமில் சூழ்நிலைக்கு ஏற்ப தயாராக வேண்டும். இன்றைய போட்டியில் அதிகபடியான க்ராஸ் இருக்கிறது. அதனால் தான் நாங்களும் பவுலிங் செய்ய வேண்டுமென்று நினைத்தோம். ஆனால், பரவாயில்லை முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். கடந்த போட்டியில் சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி உள்ளனர். அதேபோல தான் இன்றைய போட்டியில் இருக்கும் என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.”

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here