முன்னாடி ZERO ஆனால் இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் HERO -வே இவர் தான் ; ரசிகர்கள் வரவேற்பு ;

0

முதல் ஒருநாள் போட்டி : நேற்று மதியம் 1:30 மணியளவில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோதின.

ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் :

டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 5 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் மிச்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இருப்பினும் தொடர்ந்து விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 35.4 ஓவர் முடிவில் 188 ரன்களை அடித்தனர்.

இதில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 81, ஸ்டீவன் ஸ்மித் 22, ஜோஷ் இங்கிலீஸ் 26 ரன்களை அடித்துள்ளனர்.

இந்திய அணியின் இலக்கு :

பின்பு 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. தொடக்கத்தில் நான்கு விக்கெட்டை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதனால், கே.எல்.ராகுல் , ரவீந்திர ஜடேஜாவின் பார்ட்னெர்ஷிப் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தது.

அதனால் 39.5 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 191 ரன்களை கைப்பற்றி ஆஸ்திரேலியா அணியை வென்றுள்ளது இந்திய. அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருகிறது இந்திய.

கம்பேக் கொடுத்த இந்திய அணியின் தொடக்க வீரர் :

பல போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் கே.எல்.ராகுலின் பங்களிப்பு சமீப காலமாகவே பெரிய அளவில் இந்திய அணிக்கு பயனுள்ளதாக இல்லை. அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மோசமான பேட்டிங்-ஐ வெளிப்படுத்தினார்.

அதனால் இது வரை இல்லாத அளவிற்கு கே.எல்.ராகுல் பற்றிய விமர்சனம் அதிகரித்து கொண்டே சென்றது. ஆனால், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மிடில் ஆர்டரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்தி கொண்ட கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி ரன்களை விளாசினார். அதுவும் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் விளையாடிய கே.எல்.ராகுல் 75* ரன்களை அடித்துள்ளார். அதனால் தான் இந்திய அணி வெல்ல முக்கியமான காரணமாக அமைந்தது.

இதனை பாராட்டும் வகையில் ரசிகர்கள் கே.எல்.ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here