ரோஹித் சர்மா இந்திய அணிக்கு திரும்பினால், இவர் தான் அணியில் இருந்து நீக்கப்படுவார் ; முன்னாள் வீரர் ஓபன் டாக் ;

0

இந்தியிற் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சீரியஸ் தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றுள்ளனர்.

அதனை தொடர் முதல் ஒருநாள் போட்டியில் வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. நேற்று தொடங்கிய மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இடம்பெறவில்லை.

அதனால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்டிக் பாண்டிய சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இருப்பினும் ரோஹித் சர்மா இடத்தில் இளம் வீரரான இஷான் கிஷான் இடம்பெற்றார்.

கடந்த ஆண்டு இறுதியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார் இஷான் கிஷான். அதேபோல சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால், தொடக்க வீரராக விளையாடிய இஷான் கிஷான் வெறும் 3 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில், “நேற்று விளையாடிய இந்திய அணியின் இரண்டு (இஷான் கிஷான், சுப்மன் கில்,)தொடக்க வீரர்களுமே இரட்டை சதம் விளாசிய வீரர்கள் தான்.”

“இதில் யாராவது ஒருவருக்கு பதிலாக ரோஹித் சர்மா தான் இடம்பெற போகிறார். எனக்கு இஷான் கிஷனை பார்த்தால் அருண் லால் தான் நியாபகர்த்திற்கு வருகிறார். ஏனென்றால், முன்பு நாங்கள் விளையாடிய காலத்தில் கவாஸ்கர்-க்கு காயம் ஏற்பட்டால், அல்லது அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் அவருக்கு பதிலாக அருண் லால் விளையாடுவார்.”

“பின்பு கவாஸ்கர் விளையாட வந்தால் அருண் லால் -க்கு இடம் இருக்காது. அதேபோல தான் இஷான் கிஷனும் என்று கூறியுள்ளார் மஞ்சரேக்கர்.”

வெறும் 3 ரன்களை அடித்த இஷான் கிஷான் இறுதியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் அடித்த ரன்களில் விவரம் : 3, 17, 8, 5, 210, 10, 93, 20, 50, 6 ரன்களை அடித்துள்ளார்.

பிருத்வி ஷாவ், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற பல இளம் வீரர்கள் இருக்கும்பட்சத்தில் ஏன் இஷான் கிஷானுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்து வருகிறது…? இஷான் கிஷானுக்கு பதிலாக யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here