இன்றைய போட்டியில் இதை செய்தால் மட்டுமே இந்திய அணியால் வெல்ல முடியும் ; ஆனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு அது சிரமம் தான் ;

0

இன்று மதியம் நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான நிலையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய போட்டியில் வெல்ல இந்திய கிரிக்கெட் அணிக்கு வாய்ப்புகள் இருகிறதா ?

இதுவரை மொத்தம் 22 சர்வதேச டி-20 போட்டிகளில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணி மோதியுள்ளனர். அதில் இந்திய கிரிக்கெட் அணி 12 முறையும், இங்கிலாந்து அணி 10 முறையும் கோப்பையை வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த சீரியஸ் தொடரில் கூட 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளனர். அதனால் இன்றைய போட்டி இந்திய அணிக்கு சவாலாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதையும் படியுங்: இந்திய அணியில் இவரது விக்கெட்டை கைப்பற்றினால் போதும் ; ஆனால் அது கடினம் தான் ; ஜோஸ் பட்லர் ஓபன் டாக் ;

அதுமட்டுமின்றி, இன்று நடைபெற உள்ள போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை நடந்த போட்டியை வைத்து பார்த்தால் முதல் பேட்டிங் செய்த அணிகள் தான் அதிகபட்சமாக 4 போட்டியில் வென்றுள்ளனர். ஆனால் முதல் பேட்டிங் செய்தால் குறைந்தது 180 ரன்களை எதிர் அணிக்கு இலக்காக வைக்க வேண்டும்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் டார்கெட் செட் செய்யுமா என்று கேட்டால் ? சந்தேகம் தான். அதனால் இந்திய கிரிக்கெட் அணி டாஸ் வென்றால் அதிகபட்சமாக முதலில் பவுலிங்கை தேர்வு செய்யவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பயிற்சி மேற்கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவிற்கு காயம் ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது அவர் குணமடைந்து விட்டதாகவும் இன்றைய செமி பைனல் போட்டியில் விளையாடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட போகும் உத்தேச இந்தியா கிரிக்கெட் அணியின் விவரம் :

கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய, ரிஷாப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமத் ஷமி.

இந்திய அணியின் பலம் மற்றும் வீக்னஸ் :

இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பும்ரா, ஜடேஜா போன்ற முன்னணி பவுலர்கள் இல்லாமல் இந்திய அணி சிறப்பாக தான் பவுலிங் செய்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, மிடில் ஆர்டர் பேட்டிங் தான் இந்திய அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் வீக்னஸ் என்றால் தொடக்க ஆட்டம் தான். அதிலும் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் பார்ட்னெர்ஷிப் தான் கவலையான நிலையில் இருக்கிறது.

இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் 5 லீக் போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா வெறும் ஒருமுறை மட்டுமே அரைசதம் அடித்தார். அதுவும் நெதர்லாந்து அணியை எதிர்த்து. மற்ற போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார். அதேபோல தான் கே.எல்.ராகுலும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் கே.எல்.ராகுல் தொடர்ச்சியாக ரன்களை அடிப்பது இல்லை. ஒருவேளை இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு அதிரடியான தொடக்க ஆட்டம் அமைந்தால் நிச்சியமாக இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here