இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பட்டைய கிளப்ப போகும் இந்திய அணி இதுதான் ; இனிமேல் இவருக்கு வாய்ப்பு இருக்காது ; சோகத்தில் ரசிகர்கள் ;

1

ஆஸ்திரேலியா : உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த டி-20 உலகக்கோப்பை போட்டிகள் சுவாரஷியமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த சூப்பர் 12 லீக் போட்டிகளில் இருந்து இந்திய, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் செமி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

செமி-பைனல் போட்டி :

நேற்று நடந்த முதல் செமி பைனல் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வென்றுள்ளது பாகிஸ்தான். அதேபோல இன்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோத உள்ளனர்.

இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் யார் விளையாட போகிறார்கள் ?

இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கியதில் இருந்து இந்திய அணியின் ப்ளேயிங் 11 அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் நடந்து இல்லை. ஏனென்றால்ம் அடிக்கடி அணியில் இருக்கும் வீரர்களை மாற்றினால் யார் சரியாக விளையாடுவார் என்ற குழப்பம் ஏற்படும். அதனால் அவ்வப்போது ஒருவரை மட்டுமே மாற்றியுள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா. இருந்தாலும் இன்று நடைபெற உள்ள போட்டி மிகவும் முக்கியமான ஒன்று என்ற காரணத்தால் இந்திய அணியின் ப்ளேயிங் 11 யாராக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது..!

தொடக்க வீரர்கள் : ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல்

மிடில் ஆர்டர் :விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக்.

ஆல் -ரவுண்டர் : ஹர்டிக் பாண்டிய மற்றும் அக்சர் பட்டேல்.

பவுலர் : ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமத் ஷமி மற்றும் அர்ஷதீப் சிங்.

இதில் ஒரு மாற்றம் மட்டுமே நடைபெற வாய்ப்புகள் உள்ளது. அது விக்கெட் கீப்பர் தான். அதில் கடந்த பல போட்டிகளில் ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் தான் ப்ளேயிங் 11 ல் இடம்பெற்று வருகிறார். ஆனால் இந்த உலகக்கோப்பை போட்டியில் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் தினேஷ் கார்த்திக் திணறிக்கொண்டு இருக்கிறார்.

அப்போ ரிஷாப் பண்ட் சிறப்பாக விளையாடுவாரா ?

அதுவும் சந்தேகம் தான். ஏனென்றால் லீக் போட்டிகளில் ஜிம்பாபே அணியை எதிர்த்து விளையாடியது இந்திய. அதில் தினேஷ் கார்த்திக்-க்கு பதிலாக ரிஷாப் பண்ட் -க்கு தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் வெறும் 3 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் 13வது ஓவரில் விளையாடிய ரிஷாப் பண்ட் -க்கு பேட்டிங் செய்ய 7 ஓவர்கள் மீதம் இருந்தன. ஆனால் விக்கெட்டை இழந்தார் ரிஷாப். அதனால் இப்பொழுது விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மேன் இடத்தில் யார் இருந்தாலும் இந்திய அணிக்கு பெரிய மாற்றம் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!

இந்திய அணியின் சிறந்த ப்ளேயிங் 11 யார் யார்? உங்கள் கருத்துக்களை மறக்கமால் பதிவு பண்ணுங்க…!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here