சாத்தியமா யாருக்குமே இந்த நிலைமை வரக்கூடாது …! பாவம் ப…! ரோஹித் சர்மா ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2024 கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம ஆனது ஐபிஎல் பின்பு ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றதால் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது.

இதுவரை 16 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் 17வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் 2024 போட்டியில் பல எதிர்பாராத மாற்றங்களை கொண்டு விளையாடி வருகின்றனர். ஆமாம், தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார், அதுமட்டுமின்றி, இதுதான் தோனிக்கு இறுதி ஐபிஎல் சீசன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஹித் ஷர்மாவுக்கு இப்படியா ?மும்பை இந்தியன்ஸ் அணி செய்தது சரியான விஷயமா ?

ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு அடுத்த படியாக 5 முறை சாம்பியன் படத்தை கைப்பற்றியாக அணியாக திகழ்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. அதுவும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தான் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வெற்றி பெற வைத்துள்ளார் என்று ரசிகர்களுக்கு நன்கு தெரியும்.

ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் ஹர்டிக் பாண்டியவை வாங்கியது மும்பை. அதனால் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்டிக் பாண்டியாவை கேப்டனாக நியமனம் செய்துள்ளனர். இதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் அணி ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் ஆனதில் ஹர்டிக் பாண்டிய தான் கேப்டனாக விளையாடினார். குஜராத் அணி முதல் ஆண்டில் கோப்பையை வென்றது, இரண்டாவது ஆண்டில் இறுதி போட்டி வரை விளையாடியுள்ளனர். அப்பொழுது குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்தியது தான் ஹர்டிக் பாண்டிய இப்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மாறியுள்ளாரா ?

ஆனால் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு சிறப்பாக விளையாடி கேப்டனாக இடம்பெற்ற ரோஹித் சர்மா தலைமையில் தான் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் இப்பொழுது வெறும் ஒரு ப்ளேயர் ஆக ரோஹித் ஷர்மாவை பார்ப்பது நிச்சியமாக ரசிகர்கள் வருத்தத்தை தான் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

சென்னை அணிக்கு எப்படி தோனி இருக்கிறாரோ, அதே போல தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா விளையாடி வருகிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ரோஹித் ஷர்மாவிக்கு பதிலாக ஹர்டிக் பாண்டிய கேப்டனாக விளையாடுவது சரியாக முடியாக தெரிகிறதா ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன ?