எங்க அணியின் மலிங்கவே இவர் தான் ; இந்த போட்டியில் இவரை களமிறக்கியுள்ளோம் ; ருதுராஜ் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2024 கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7:30 மணியளவில் சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளனர்.

முதல் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியும், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் வென்றுள்ளனர். அதனால் இன்றைய போட்டி நிச்சியமாக இரு அணிகளுக்கு சவாலாக தான் இருக்கும். சென்னை மற்றும் குஜராத் அணிகள் 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

அதில் சென்னை அணி இரு போட்டிகளிலும், குஜராத் அணி மூன்று போட்டிகளிலும் வென்றுள்ளனர். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளனர். அதனால் சென்னை அணியின் அதிரடியான பேட்டிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியின் மலிங்க:

சில காரணங்களுக்காக முதல் போட்டியில் விளையாடாத நிலையில் இருந்துள்ளார் இலங்கை அணியை சேர்ந்த மதீஷ் பாதிரான. இருப்பினும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் பவுலிங் சிறப்பாக இருந்துள்ளது. ஆனால் இன்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பாதிரான சென்னை அணியில் விளையாட போகிறார்.

டாஸ்-க்கு பிறகு பேசிய ரூட்டுராஜ் கூறுகையில் : “நாங்களும் பவுலிங் செய்ய தான் ஆசைப்பட்டோம், முதல் போட்டியை போலவே. அதில் தொடக்கத்தில் மோசமான நிலையில் இருந்தோம், ஆனால் காம்பேக் கொடுத்து வெற்றியை கைப்பற்றினோம் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில். அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் எங்க அணியின் (சென்னை) மலிங்க – பாதிரான இடம்பெற்று விளையாட போகிறார்.”

சென்னை அணியின் ப்ளேயிங் 11:

ரூட்டுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ராசின் ரவீந்திர, ரஹானே, டேரில் மிட்சேல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, மகேந்திர சிங் தோனி, தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே மற்றும் ரஹமான்.