இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது…! டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய இந்திய வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 329 ரன்கள் எடுத்தனர்.
330 எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட் இழந்ததால் அவர்களால் சரியான நேரத்தில் ரன்களை அடிக்க முடியாமல் போய்விட்டது. அதுமட்டுமின்றி 8வது வரிசையில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரண் இறுதிவரை போராடி ஆட்டம் இழக்காமல் 95 ரன்களை அடித்துள்ளார்.
சாம் காரனுக்கு நல்ல பார்ட்னெர்ஷிப் கிடைத்து இருந்தால் நிச்சியமாக நல்ல ரன்களை சரியான நேரத்தில் அடித்திருக்க முடியும் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர். இங்கிலாந்து அணியை வென்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும்பொழுது இந்திய அணி நிறைய மிஸ் பீல்டிங் மேட்ச் கேட்ச் மிஸ் செய்துள்ளனர். அதனை தவிர்த்து இருந்தால் நிச்சியமாக இறுதி நேரத்தில் இந்தியா அணிக்கு பதற்றம் இருந்திருக்காது..! அதனை கிண்டல் செய்யும் வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ” அவர் மீண்டும் அவரது பீல்டிங் அகாடமியை மீண்டும் இந்திய அணி வீரர்களுக்காக ஓபன் செய்ய போகிறேன்” என்று கூறியுள்ளார்.
இவர் இந்திய அணியின் பீல்டிங் பற்றி கிண்டல் செய்ததால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். சமூகவலைத்தளங்களில் அவரை கிண்டல் செய்தும் அவர் விமர்சித்தும் புகைப்படங்களை பதிவு செய்துவருகின்றனர் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள்.
இதுவரை நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி , அனைத்து விதமான தொடரையும் கைப்பற்றியது. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
இனி அடுத்த லைவ் கிரிக்கெட் போட்டி வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி என்று முடிவாகியுள்ளது. அதுதான் ஐபிஎல் போட்டி, நிச்சியமாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காது கொண்டிருக்கும் போட்டிதான் ஐபிஎல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.