ஐபிஎல் 2021: இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டி 9ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோத உள்ளன. இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஏன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் போட்டி சென்னை மைதானத்தில் நடைபெற போகிறது ?? இந்த ஆண்டு மீண்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளதால். ஒரு சில மைதானத்தில் மட்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் எந்த அணிக்கும் அவரவர் ஹாம் மைதானம் கிடையாது என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிகளில் பல சர்ச்சை ஏற்பட்டது. எதற்கு தெரியுமா? களத்தில் இருக்கும் நடுவரின் சாப்ட் சிக்னல் அதாவது அவுட் அல்லது நாட் அவுட் அல்லது கேட்ச் ஆகியவற்றிக்கு களத்தில் இருக்கும் நடுவரின் பதில் இருக்கும். பின்னர் டிவி நடுவரை கேட்டாலும், இறுதி முடிவு கள நடுவரின் முடிவுதான் உறுதியானது. இதனால் பல முடிவுகள் தவறாக இருந்து இருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி-20 போட்டியில் சூரியகுமார் யாதவை கேட்ச் மிகப்பெரிய சர்ச்சையானது. ஏனென்றால் கள நடத்துவர் அவுட் கொடுத்துவிட்டார். இருந்தாலும் டிவி நடுவரை கேட்ட பொது அந்த பந்தை இங்கிலாந்து அணி வீரர் தரையில் பட்டுத்தான் அதனை பிடித்துள்ளார். நியப்படி பார்த்தால் அதற்கு நாட் அவுட் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கள நடுவரின் முடிவு இறுதியானது என்பதால் விக்கெட்டை இழந்தார் சூரியகுமார் யாதவ்.
அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 59 ரன்கள் எடுத்த நிலையில், கள நடுவரின் தவறான முடிவால் விக்கெட்டை இழந்தார் சூரியகுமார் யாதவ். அதனால் இந்த பிரச்சனை தவிர்க்க இனி நடக்க போகின்ற ஐபிஎல் 2021 போட்டிகளில் கள நடுவரின் சாப்ட் சிக்னல் இல்லை என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் கள நடுவரின் முடிவால் பல போட்டிகளின் நிலைமை தலைகீழாக மாற்றியுள்ளது. பிசிசிஐ முடிவால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.