புவனேஸ்வர் குமாரை விட இவரது பவுலிங் பவுலிங் மிகவும் அசத்தலாக உள்ளது ; முன்னாள் வீரர் உறுதி ;

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை வழக்கம் போல பவுலிங் செய்ய போவதாக கூறியது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்த நிலையில் 198 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் மயங்க் அகர்வால் 52, ஷிகர் தவான் 70, பரிஸ்டோவ் 12 ரன்களை அடித்தனர். பின்பு 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது. இறுதி வரை போராடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 186 ரன்களை தான் அடிக்க முடிந்தது.

அதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பஞ்சாப் கிங்ஸ். இப்பொழுது எந்த ஆண்டு இல்லாத அளவிற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதுவரை பஞ்சாப் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் 3 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் ; “எல்லாரும் மற்ற வீரர்களை பற்றி பெருமையாக பேச்சுக்கொண்டு இருக்கீங்க. ஆனால் யாரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷதீப் பற்றி பேசுவதே இல்லை.”

ஸ்மித் நான்கு விக்கெட்டை கைப்பற்றியதை பற்றி பேசிய நம்பர்கள் இதனை மறந்துவிட்டார்களா ? அர்ஷதீப் விக்கெட்டை கைப்பற்றவில்லை என்றாலும், 18வது ஓவரில் ஐந்து ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். இதனை இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து செய்து வருகிறார்.”

“ஒரு அணி வெற்றி பெறுவதற்கு முக்கியமான ஒன்றாக நான் இதனை பார்க்கிறேன். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கூட அந்த ஓவரில் அதிரடியாக விளையாட முடியாமல் ஒரு ரன்களாக அடித்துள்ளார். அதுதான் ஒரு பவுலருக்கு முக்கியமான ஒன்று…!”

“இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி புவனேஸ்வர் குமாரை தான் நம்பி வருகிறது. அவரும் சிறந்த பவுலர் தான். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அர்ஷதீப் மற்றும் புவனேஸ்வர்குமார் போன்ற இருவரை ஒப்பிட்டு பார்த்தால், அர்ஷதீப் தான் டி-20 போட்டிக்கான சிறந்த வீரராக திகழ்கிறார்.”

நிச்சியமாக இந்திய பவுலர்கள் பட்டியலில் அர்ஷதீப் முதல் ஐந்து இடத்தில் இடம்பெறுவார். எப்படி பும்ரா, லசித் மலிங்க போன்ற பவுலர்களை எதிர்கொள்ளும் போது ஏற்படும் சவால்கள் தான் அர்ஷதீப் பவுலிங்கிலும் உள்ளது என்று கூறியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.”

அர்ஷதீப் சிங்-க்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்குமா பிசிசிஐ ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.