இவரை விட திறமையான ஒரு பினிஷர் வேறு யாருமில்லை ; இந்திய வீரர் பற்றி பேசிய ; இலங்கை முன்னாள் வீரர் ஜெயாவார்த்தேனே உறுதி ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை இரு புதிய அணிகளை அறிமுகம் செய்துள்ளதால் விறுவிறுப்பான போட்டிக்கு ஒருபோதும் பஞ்சம் இருக்காது.

ஐபிஎல் டி-20 லீக் இதுவரை 14 சீசன் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது 15வது சீசன் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் அதிக முறை சாம்பியன் படத்தை கைப்பற்றிய பெருமை நிச்சியமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான் சேரும். ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தம் ஐந்து முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது.

அப்படி இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை புள்ளிபட்டியலில் இறுதியான 10வது இடத்தில் உள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகபெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை. இதில் இருந்து மீண்டு வருமா மும்பை இந்தியன்ஸ் அணி ?

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் ” இன்றைய போட்டியில் கலந்து கொண்ட உடனையும் போட்டியை வென்றுவிட முடியாது. சில நேரங்கள் ஆகும். அதுமட்டுமின்றி, மும்பை அணியில் 6 பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.”

“அதிலும் சூர்யகுமார் யாதவை போல சிறந்த பினிஷர் நிச்சியமாக வேறு யாரும் இருக்க முடியாது. பவர் ப்லேவில் பவுலிங்-கில் நிச்சியமாக ஸ்விங் இருக்கும். அந்த நேரத்தில் நான் சூர்யகுமார் யாதவை களமிறக்கமாட்டேன். அதுமட்டுமின்றி, அந்த மாதிரியான சூழ்நிலையில் அவரால் விளையாட முடியாது.”

“இறுதி நேரத்தில் தான் பொல்லார்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற இருவரும் களமிறங்கி விளையாட முடியும். அவர்கள் களமிறங்கிய பிறகு சில நேரம் அவர்களுக்கு என்ன நடக்கின்றது ? என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி அவர்கள் யோசனை செய்வார்கள்.”

அதன்பிறகு தான் அவர்களால் சரியாக விளையாட முடியும். எந்த நேரத்தில் யாரை விளையாட வைக்க வேண்டும் என்ற யுக்தி உள்ளது. அதனால் சரியான முறையில் செயல்படுத்தினால் தான் அணிக்கு நல்ல ஒரு முடிவுகள் வரும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் ஜெயாவார்த்தேனே.

ஐந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ப்ளே – ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இருக்குமா ?? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here