உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் தான் இப்படி செய்ய போகிறார்கள் ; வேறு யாரும் அப்படி செய்யப்போவதில்லை பிரெட்-லீ பேட்டி ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்ட உலகக்கோப்பை டி-20 2021 போட்டிகள் கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த உலகக்கோப்பை போட்டிகள் மாதம் நவம்பர் 14ஆம் வரை சிறப்பாக நடைபெற உள்ளது. இந்திய அணியிக்கு முதல் போட்டி வருகின்ற 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள போகிறது.

சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதுமட்டுமின்றி, இந்த முறை ஐசிசி உலகக்கோப்பை டி-20 2021 உலகக்கோப்பை போட்டியில் தோனியை இந்திய அணியின் ஆலோசகராக அறிவித்துள்ளது பிசிசிஐ.

சமீபத்தில் நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தை வைத்து ப்ளேயிங் 11-ஐ முடிவு செய்ய முடியும். அதில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவர் தான் என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார்.

பேட்டிங் செய்ய ஆட்கள் சரியாக உள்ளார்கள். ஆனால் பவுலர்களில் ஆட்களை தேர்வு செய்வதில் தான் சிக்கல் ஏற்படும். ஏனென்றால், முகமது ஷமி, ஷர்டுல் தாகூர், பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்ரவத்தி, ராகுல் சஹார், புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் உள்ளார்கள்.

இப்பொழுது ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனால் சில வீரர்கள் அவரவர் கருத்துக்களை கூறுவது வழக்கம். அதேபோல, தான் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

பிரெட் லீ அளித்த பேட்டியில் ; எனக்கு தெரிஞ்சு இந்த உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியிடம் பல திறமையான வீரர்கள் உள்ளார்கள். பவுலிங் ஆக இருந்தாலும், பேட்டிங் ஆக இருந்தாலும் இந்திய அணியில் அருமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

அதிலும் கே.எல்.ராகுல் அதிக ரன்களையும், முகமது ஷமி அதிக விக்கெட்டைகளை கைப்பற்ற போகிறார்கள். ஏனென்றால் இவர்கள் இருவரும் கடந்த இரு மாதங்களாக இவர்களது ஆட்டம் சிறந்த ஒன்றாக இருந்துள்ளது என்று பிரெட் லீ கூறியுள்ளார்.

இந்திய அணியின் விவரம் இதோ :

விராட்கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், பும்ரா, ஷர்டுல் தாகூர், வருண் சக்ரவத்தி, ராகுல் சஹார் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.