நடராஜனின் செய்த செயலால் மெய்சிலிர்த்து போன… பயிற்சியாளர்… அப்படி என்ன நடராஜன் செய்தார் தெரியுமா…; முழு விவரம்..

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிறப்பான யார்க்கர் பந்துவீச்சால், கிரிக்கெட் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வீரர் நடராஜன். கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் நடரான் மற்றும் வருணச்சக்ரவத்தி ஆகிய இருவரும் இந்திய அணியில் தேர்வு செய்துள்ளனர் பிசிசிஐ.

அதில் வருண்சக்கரவாதி காயம் காரணமாக அவரால் இந்திய அணியில் இணைந்து விளையாட முடியவில்லை. அதனால் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுத்தது இந்திய கிரிக்கெட் அணி. அவரது அசத்தலான பந்துவீச்சில் ஆஸ்திரேலியா அணியின் முக்கியமான விக்கெட்டை எடுத்துள்ளார் நடராஜன்.

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் தொடரின் வெல்ல நடராஜனின் பங்கும் அதில் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்றதால் இந்திய வீரர்களுக்கு பரிசாக 5கோடி ரூபாய் கொடுத்துள்ளது பிசிசிஐ.

இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தலைவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் தாகூர், சுமன் கில், நவதீப் சைனி, நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஐவருக்கும் SUV மாடல் கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் புதிய வீரர் நடராஜன், அவருக்கு பரிசாக வந்த காரை அவருடைய பயிற்சியாளருக்கு கொடுத்துள்ளார். இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அவரின் பெருமிதத்தை பற்றி பாராட்டி வருகின்றனர்.

நான் முதல் முதலில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியதில் இருந்து இப்பொழுது வரை என்னுடைய பயிற்சியாளர் தான் என்னை இந்த அளவுக்கு மாற்றியுள்ளார் என்றும், அதனால் இந்த காரை மற்றும் நடராஜன் கையெழுத்திட டி-ஷர்ட்டும் பயிற்சியாளருக்கு பரிசாக கொடுத்துள்ளார் டி. நடராஜன்.

அவரது இந்த செயலால், தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர். அவரது தொடர்முயற்சியாலும், தன்னம்பிக்கையுடன் போராடியதே அவர் வெற்றிக்கு காரணமாகும்.

வாழ்த்துக்கள் நடராஜன்.