இவரை எதுக்கு டீம்-ல எடுக்கறீங்க ?  சுண்டல், பொறி சாப்பிடவா ; ரசிகர்கள் ஆவேசம் ; ஹர்டிக் பாண்டிய செய்த தவறு இதுதான் ;

0

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வென்று 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் இருக்கின்றனர்.

இரண்டாவது போட்டியின் விவரம் :

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டிய முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு சிறப்பாக பேட்டிங் அமைந்தது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 206 ரன்களை அடித்தனர்.

பின்பு 207 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. ஏனென்றால், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு அழுத்தம் ஏற்பட்டது.

இருந்தாலும் இந்திய அணியின் ஆல் – ரவுண்டரான அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இருப்பினும் இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணியால் 190 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது இலங்கை அணி.

இந்திய அணியின் தொடர்ந்து வரும் பிரச்சனை :

கடந்த ஒரு வருடத்திற்கு மேல் இந்திய அணியின் தொடக்க வீரர்களுக்கான பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. ஆமாம், இதுவரை கிட்டத்தட்ட 10 க்கு மேற்பட்ட வீரர்கள் தொடக்க வீரர்களான விளையாடி உள்ளனர். அதில் சிறந்த பார்ட்னெர்ஷிப் இதுதான் என்று யாராலும் சொல்லவே முடியாது. ஏனென்றால், அவ்வப்போது ஓவ்வொரு போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இதுவரை ரோஹித் சர்மா, சுப்மன் கில், இஷான் கிஷான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், தீபகே ஹூடா போன்ற வீரர்கள் தொடக்க வீரர்களாக விளையாடி இருக்கின்றனர். இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடரில் இதுவரை இரு டி-20 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் தான் தொடக்க வீரராக விளையாடி வருகின்றனர்.

இதில் சுப்மன் கில் இரு போட்டிகளிலும் சேர்த்து 5,7 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். ஆனால் திறமையான வீரரான ருதுராஜ் கெய்க்வாட் உள்ளூர் போட்டிகளில் மட்டுமின்றி ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ்-க்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை ?

சுப்மன் கில்-ஐ காட்டிலும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக தான் விளையாடுவார் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here