இந்திய அணியின் கேப்டனாக பும்ரா இருக்க கூடாது ; அதற்கு இதுதான் ஒரே காரணம் ; முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிரடி பேட்டி ;

விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஆரம்பித்தது இந்திய அணியின் கேப்டன் சர்ச்சை. ஆமாம் ..! இந்த பிரச்சனை கடந்த ஐசிசி உலகக்கோப்பை டி-20 2021 போட்டிகளுக்கு பிறகு நான் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக விராட்கோலி அறிவித்தார்.

பின்னர் டி-20 போட்டிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஒருநாள் போட்டியில் விராட்கோலி கேப்டனாக இருக்க வேண்டும். குறைவான ஓவர் போட்டிகளை இரு கேப்டன்கள் இருக்க கூடாது என்று பிசிசிஐ மற்றும் அணியின் தேர்வாளர்கள் முடிவு செய்து விராட்கோலி-யை ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

பின்னர் வெறும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் மட்டுமே விளையாடி வந்தார் விராட்கோலி. தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டியில் 1 – 2 என்ற கணக்கில் இந்திய அணி பின்னடைவை சந்தித்த காரணத்தால் தொடரை வெல்ல முடியாமல் போனது.

அதன் கோவத்தால் விராட்கோலி, நான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகுகிறேன் என்று கூறியுள்ளார். அதில் இருந்து இந்திய அணியின் கேப்டன் பற்றி பேச்சு தினம்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் பும்ரா தான் துணை கேப்டனாக இருந்துள்ளார்.

இதனை பற்றி பேசிய பும்ரா ; கேப்டனாக இருக்க வாய்ப்பு கிடைத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அதேபோல தான் நானும். என்னை விட மற்ற வீரர்கள் யார் கேப்டனாக இருந்தாலும் நான் அவர்களுடன் இணைந்து விளையாடி என்னுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுக்க உள்ளேன் என்று கூறியுள்ளார் பும்ரா.

இதனை பற்றி சமீபத்தில் பேசிய இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியின் கேப்டனாக பும்ரா இடம்பெற வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் ” நான் அப்படி எல்லாம் யோசித்ததே இல்லை. அந்த ஒரு செயலை நான் நினைத்து கூட நான் பார்க்க மாட்டேன்.

ஏனென்றால் இந்திய அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக வருவது மிகவும் கடினம். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான பாப் வில்லிஸ் ஒரு வேகப்பந்து வீச்சாளர் மட்டுமின்றி அவ்வப்போது பேட்டிங் செய்து ரன்களை அடித்துள்ளார். அப்படி பட்ட ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியின் கேப்டனாக இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளர் எப்பொழுது பவுலிங் செய்யும்போது அதிக விக்கெட்டை கைப்பற்றி அதிக போட்டிகளில் வெல்ல ஆக்குரோசமாக தான் இருப்பார்கள். இருந்தாலும் ஆல் -ரவுண்டரான கபில் தேவ், இம்ரான் போன்ற வீரர்களை போல இருந்தால் கேப்டனாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.