இவரை பற்றி யாருமே யோசிக்கவே இல்லை ; இவரும் இந்திய வீரர் தான் ..! வாய்ப்பே கொடுக்கப்படுவது இல்லை ; முன்னாள் வீரர் அதிரடி பேட்டி ;

0

சமீபத்தில் தான் தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

அதில் இந்திய அணிக்கு மோசமான தோல்வி தான் கிடைத்தது. அதனை தொடர்ந்து இப்பொழுது இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது இந்தியாவில். அதனால் இந்த தொடரில் ஆவது இந்திய அணி வெல்லுமா? என்ற கேள்வியுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, நேற்று மாலை தான், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா தான் இந்திய அணியை வழிநடத்த போவதாகவும் பிசிசிஐ உறுதி செய்துள்ளது. அதில் மொத்தமாக 18 பேர் கொண்ட வீரர் ஒருநாள் போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.

எப்பையும் போலவே சில வீரர்கள் அணியில் இல்லாதது அதிர்ச்சியாக தான் இருக்கும். அதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ; அஸ்வின் பற்றி சொல்ல ஒன்னும் இல்லை, ஏனென்றால் அவர் இன்னும் 1.5 மாதங்கள் விளையாட போவதில்லை என்று சில தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதனை இன்னும் பிசிசிஐ உறுதி படுத்தவில்லை.

ஆனால் அணியில் ராகுல் சஹார் மற்றும் வருண் சக்ரவத்தி ஆகிய இருவரும் இருக்கிறார்களா ? இல்லையா ? இந்த முறை முதல் முறையாக ரவி பிஷோனி அணியில் இடம்பெற்றுள்ளார். அதனால் யாரும் ராகுல் சஹார் அணியில் இல்லாததை பற்றி யாருமே பேசவில்லை. அதேபோல தான் இஷான் கிஷானும் அணிய இல்லாதது அதிர்ச்சியாக இருந்தாலும், இதில் யோசிக்க வேண்டிய ஒட்டு விஷயம் இவர்கள் எல்லாம் ஐசிசி 2021 டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள்.

அதிலும் குறிப்பாக ராகுல் சஹார் மற்றும் வருண் சக்ரவத்தி ஆகிய இருவரும் உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற்ற வீரர்கள். ஆனால் இப்பொழுது இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றனர். ஆனால் இந்த முறை ரவிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு தான், ஆனால் ராகுல் சஹாரை போல அணியில் இருந்து வெளியேற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா…!!!!!….!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here