இனிமேல் இந்திய அணியில் ரோஹித், விராட்கோலிக்கு வாய்ப்பு கொடுக்க போவது இல்லை ; பிசிசிஐ திட்டம் இதுதான்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ளது. அதில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி.

அதனால் நாளை நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வென்றால் மட்டுமே தொடரை ட்ரா செய்ய முடியும். இல்லாவிட்டால் ஒருநாள் போட்டிக்கான தொடரை நியூஸிலாந்து அணி வென்றுவிடும். அதனால் இந்திய கிரிக்கெட் அணி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இந்திய அணியின் மோசமான நிலை :

என்னதான் மற்ற அணிகளுக்கு இடையேயான தொடரில் சிறப்பாக விளையாடினாலும் ஐசிசி போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறது இந்திய. ஆமாம், தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மட்டும் தான் அனைத்து விதமான கோப்பையையும் வென்றுள்ளனர். அவரை அடுத்து விராட்கோலி, ரோஹித் சர்மா போன்ற இருவரும் முயற்சி செய்து வருகின்றனர்.

அதிலும் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் கேப்டனான ரோஹித் சர்மாவின் பங்களிப்பும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் மோசமான நிலையில் வெளியேறியது இந்திய. அதனால் இதுவரை பார்த்திராத அளவிற்கு இந்திய அணி மேல் விமர்சங்கள் எழுந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் பார்ட்னெர்ஷிப் மற்றும் முகமத் ஷமி, புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் தான் தோல்விக்கு காரணம் என்றும் 30வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமென்று சமூகவலைத்தளங்களில் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்ட தகவல் :

“பிசிசிஐ நிச்சியமாக யாரையும் ஓய்வை அறிவிக்க சொல்லாது. அது வீரர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், ஒன்று 2023ஆம் ஆண்டில் பல டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் சீனியர் வீரர்கள் அனைவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தான் கவனம் செலுத்த போகின்றனர்.”

“உங்களுக்கு தேவையில்லை என்றால் ஓய்வை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இனிவரும் அதிகப்படியான டி-20 போட்டிகளில் அதிக அளவிலான சீனியர் வீரர்களை பார்க்க முடியாது என்று உறுதியாக கூறியுள்ளது பிசிசிஐ.” அதனால் சர்வதேச டி-20 போட்டிக்கான அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கியமான காரணம் ; அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியும், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடைபெற உள்ளது. அதனால் அதில் சிறப்பாக விளையாட வேண்டுமென்ற காரணத்தால் தான் பிசிசிஐ இந்த முடிவுகளை கையில் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டுமா ? அல்லது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை அடுத்த டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு தயார் செய்ய வேண்டுமா ? உங்கள் கருத்து என்ன ?