வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ ; ரோஹித் சர்மா கேப்டன் ..! இவர் தான் துணை கேப்டனாம் ..! மறுபடியுமா ??

ஒருவழியாக அடுத்த ஒரு சீரியஸ் போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்துள்ள தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டியில் தான் ஆறுதலுக்கு ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெல்லவில்லை. மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணி வென்று, இந்திய அணியை வாஷ்அவுட் செய்தது. அதில் இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்தியது கே.எல்.ராகுல் தான்.

இந்த முறை ரோஹித் சர்மா அணியில் திரும்ப வந்துள்ள காரணத்தால், ரோஹித் சர்மா தான் கேப்டன் என்பதை உறுதி செய்தது பிசிசிஐ. ஆனால் துணை கேப்டனாக மீண்டும் கே.எல்.ராகுலை நியமனம் செய்தது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக சொல்ல போனால், நிச்சியமாக கே.எல்.ராகுல் சிறப்பாக வழிநடத்திருந்தால் நிச்சியமாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று இருக்கும். ஆனால் அப்படி நடக்காதது தான் அதிர்ச்சியே. கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரிஷாப் பண்ட் துணை கேப்டனாக இருந்திருந்தால் சிறப்பாக அமைத்திருக்கலாம்.

ஏனென்றால் கே.எல்.ராகுல் தலைமை தாங்கி வழிநடத்திய பஞ்சாப் அணி இதுவரை மோசமான நிலையில் தான் இருந்துள்ளது. ஆனால் இரு ஒரு ஆண்டு தான் டெல்லி அணியை வழிநடத்த தொடங்கினார் ரிஷாப். ஆனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது டெல்லி. என்ன தான் சிறந்த வீரராக இருந்தாலும் அணியை தேர்வு செய்வதில் கே.எல்.ராகுல் தவறவிடுகிறார் போல தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான இந்திய அணியின் விவரம் இதோ ;

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல்) துணை கேப்டன், இஷான் கிஷான், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார், ஷர்டுல் தாகூர், ரவி பிஷோனி, அக்சர் பட்டேல், அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான் மற்றும் ஹர்ஷல் பட்டேல்.