இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது உண்மை தான் ; ரோஹித் சர்மா உறுதிய ?

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியின் சுருக்கம் :

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே ஆஸ்திரேலியா அணி 63.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 177 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. 139.3 ஓவர் வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 400 ரன்களை அடித்தது இந்திய.

பின்பு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி வெறும் 32.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 91 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது.

இந்திய அணியில் நடக்க போகும் முக்கியமான மற்றம் :

இந்திய கிரிக்கெட் அணியின் டி-20 போட்டிக்கான தொடரில் வெறித்தனமாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ்-ஆல் ஒருநாள் போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடிவதில்லை. ஆமாம், சூர்யகுமார் யாதவ் இறுதியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் ஒரு முறை கூட அரைசதம் அடித்ததே இல்லை.

அதனை தொடர்ந்து இப்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் யாதவை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. ஆனால் முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடிய சூரியகுமார் யாதவ் 8 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தொடரில் மாற்றம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு கேள்வி ?

இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் எந்த விதமான (ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட்) போட்டிகளில் விளையாடினால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்தை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!