இன்னும் ஐபிஎல் போட்டியே ஆரம்பிக்கவில்லை ; அதுக்குள் CSK அணியில் இருந்து வெளியேற போகும் வீரர் இவர் தான் ;

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது தான் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். போட்டி என்ற காரணத்தால் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதனால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 15 சீசன் நடந்து முடிந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் 16 சீசன் போட்டிகள் தொடங்க உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் தான் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் போட்டிகளில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து மகேந்திர சிங் தோனி தான் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதுவரை நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

நியூஸிலாந்து வீரரான ஜேமிசன்-க்கு கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து காயம் காரணமாக எந்த விதமான போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். சமீபத்தில் டெஸ்ட் போட்டிக்கான அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மீண்டும் அவருக்கு முறிவு ஏற்பட்ட காரணத்தால் இன்னும் சில மாதங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவு கூறியுள்ளனர். டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற மினி ஏலத்தில் நியூஸிலாந்து வீரரான ஜேமிசன் -ஐ கைப்பற்றியது சென்னை.

அதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய அனைத்து விதமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஜேமிசன்-க்கு பதிலாக இந்திய அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்து என்ன ?