புது Opener-ரை அறிமுகம் செய்ய போகிறதா… சிஎஸ்கே அணி… தோனியின் புதிய plan- ஆ இருக்குமோ…??

புது Opener-ரை அறிமுகம் செய்ய போகிறதா… சிஎஸ்கே அணி… தோனியின் புதிய plan- ஆ இருக்குமோ…??

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி சிறப்பாக முறையில் ஆரம்பித்துள்ளது ஐபிஎல் 2021. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 சிஎஸ்கே அணிக்கு மோசமான போட்டியாகும். அதுமட்டுமின்றி எந்த வருடம் இல்லாத அளவுக்கு 2020 ஐபிஎல் போட்டியில் மோசமான தோல்விகளை சந்தித்ததால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் போய்விட்டது. அதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் வீரர்களும் சோகத்தில் மூழ்கினர்.

இருந்தாலும் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் அறிமுகம் ஆன ருதுராஜ் முதல் சில போட்டிகளில் சரியான ஆட்டத்தை விளையாடவில்லை. ஆனால் அதன்பிறகு விளையாடிய போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார்.அதனால் சிஎஸ்கே அணிக்கு நல்ல ஓப்பனிங் பேட்ஸ்மேன் கிடைத்துவிட்டார் என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் ஆட்டம் சரியாக அமையவில்லை.

அதனால் அவருக்கு பதிலாக புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட ராபின் உத்தப்ப, மொயின் அலி, கிருஷ்ணாப்ப கவுதம் போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதிலும் ராபின் உத்தப்ப அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அதனால் சிஎஸ்கே அணி வீரர் ருதுராஜ்-க்கு பதிலாக ராபின் உத்தப்ப இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி ராபின் உத்தப்ப தோனி அணியில் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கின்றார், அதனால் நிச்சயமாக தோனி ஒரு வாய்ப்பு அவருக்கு கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.