இது மட்டும் நடந்தால் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை ; டிவில்லியர்ஸ் அதிரடி பேட்டி..!

இது மட்டும் நடந்தால் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை ; டிவில்லியர்ஸ் அதிரடி பேட்டி..!

ஐபிஎல் 2021, 10வது போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதுவரை இந்த இரு அணிகளும் 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 13 போட்டியில் ஆர்.சி.பி அணியும் 14 போட்டியில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்த நிலையில் 206 ரன்களை எடுத்துள்ளது. அதில் கோலி 5 ரன்கள், படிக்கள் 25 ரன்கள், மேக்ஸ்வெல் 78 ரன்கள் மற்றும் டிவில்லியர்ஸ் 76 ரன்களை எடுத்துள்ளனர். பின்பு 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நேர்ந்தது தோல்வியே.

இறுதிவரை போராடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழந்து 166 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் புள்ளிப்பட்டியளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6வது இடத்திலும் பெங்களூர் அணி முதல் இடத்திலும் உள்ளது.

இது மட்டும் நடந்தால் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை ; டிவில்லியர்ஸ் அதிரடி பேட்டி..!

பெங்களுர் அணியின் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ் சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேட்டி அளித்துள்ளார். அதில் நீங்க கோப்பையை கைப்பற்றினால் எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிவில்லியர்ஸ் ; ஒருவேளை இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றினால் நாங்கள் எப்படி அதற்கு எதிர்வினை செய்யப்போகிறோம் என்று எனக்கு தெரியவில்லை.

அதுமட்டுமின்றி பல தடைகளை தாண்டி ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் இந்த வருடம் ஹாம் மைதானம் யாருக்கும் இல்லை… அதனால் இந்த சூழ்நிலையில் எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ்.