இந்திய அணியில் இவரை எடுத்தற்கு நல்ல வேணும்…! தமிழக வீரரை கிழித்தெடுத்த முன்னாள் வீரர் ;

0

நேற்று மதியம் 2 மணியளவில் தொடங்கியது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும். அதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். ஆனால் அதில் ஒரு பயனும் இல்லாமல் போனது.

முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 287 ரன்களை அடித்தனர். பின்னர் 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி, இறுதி ஓவர் வரை போராடி நான்கு பந்து மீதமுள்ள நிலையில் அனைத்து விக்கெட்டை இழந்து 283 ரன்களை அடித்தனர்.

அதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது தென்னாபிரிக்கா அணி. அதுமட்டுமின்றி, 3 – 0 என்ற கணக்கில் அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணி வென்று சாதனை படைத்துள்ளது.

அதேநேரத்தில் இந்திய அணி மோசமான நிலையில் உள்ளது. முதல் இரு போட்டிகளில் மாற்றங்கள் ஏதும் செய்யாமல் விளையாடியது இந்திய அணி. இந்திய அணியின் வீரர்களை பற்றி முன்னாள் வீரர்களை அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர், இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியை பற்றி கூறுகையில் ; இந்திய கிரிக்கெட் போட்டிக்கான ஒருநாள் அணியில் அஸ்வின் இடம்பெற்றதற்கு பல காரணங்கள் உள்ளன.

ஆனால் இந்த முறை இந்திய அணி நல்ல அனுபவித்துவிட்டது. முதல் இரு போட்டிகளில் விளையாடினார் ரவிச்சந்திரன் அஸ்வின்,ஆனால் அதில் ஒன்னும் சொல்லவும் அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை. முதல் போட்டியில் 1 விக்கெட்டையும் இரண்டாவது போட்டியில் எந்த விக்கெட்டையும் கைப்பற்றவில்லை.

மிகப்பெரிய அளவில் ரவிச்சந்திரன் அஸ்வினை நம்பியது இந்திய, ஆனால் அதற்கு நன்கு அனுபவித்துவிட்டது என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர். இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெல்லவில்லை.

3 – 0 இந்திய அணி முன்னிலையில் இருந்த தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றி இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது தென்னப்பிரிக்கா அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here