உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த உலகக்கோப்பை போட்டிக்கான நேற்று முதல் இந்தியாவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டாம் லத்தம் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின.
இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை.
பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்து கொண்டே சென்றது இங்கிலாந்து அணி. இருப்பினும் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்த நிலையில் 282 ரன்களை கைப்பற்றினர். அதில் ரூட் 77, ஜோஸ் பட்லர் 43, லிவிங்ஸ்டன் 20, பரிஸ்டோவ் 33 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.
பின்பு 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி. இதில் தொடக்க வீரரான வில் எங் முதல் பந்தில் விக்கெட்டை இழந்த காரணத்தால் நியூஸிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் டேவன் கான்வே மற்றும் ராசின் ரவீந்திர அதிரடியாக விளையாடிய வெறும் 36.2 ஓவர் முடிவில் 283 ரன்களை அடித்து இங்கிலாந்து அணியை வென்றுள்ளது நியூஸிலாந்து.
இதில் டேவன் 152* மற்றும் ராசின் ரவீந்திர 123* ரன்களை அடித்துள்ளனர். அதனால் நியூஸிலாந்து அணிக்கு வெற்றி மிகவும் சுலபமாக மாறியது. முதல் போட்டியில் வென்ற நியூஸிலாந்து அணி 2 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து அணி இறுதி இடத்திலும் உள்ளனர்.
பட்டைய கிளப்பிய நியூஸிலாந்து இளம் வீரர் :
23 வயதான ராசின் ரவீந்திர அதிரடியாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர் ஒரு இந்திய தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை. ராசின் ரவீந்திராவின் தந்தை சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இவருடைய தீவிரமான ரசிகர். அதனால் தன் மகனுக்கும் அவர்களுடைய பெயர் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ராசின் ரவீந்திர என்று வைத்துள்ளார்.
இதில் ராசின் (ரா – ராகுல் டிராவிட், சின் – சச்சின்) பெயரில் இருக்கும் அர்த்தம் இதுதான். அதுமட்டுமின்றி ராசின் ரவீந்திர விளையாடிய அதிரடியான ஆட்டத்தை பற்றியும், அவருடைய பெயரும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.