முதல் போட்டியில் களமிறங்க போகும் சென்னை அணியின் விவரம் ; உத்தேச அணியின் பட்டியல் இதோ ;

நாளை இரவு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முதல் போட்டியில் மோத உள்ளனர். இதுவரை மொத்தம் 27 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை அணி 17 போட்டிகளிலும் கொல்கத்தா 10 போட்டிகளும் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

இருப்பினும் மெகா ஏலம் முடிந்த பிறகு நடக்கும் முதல் போட்டி இது என்பதால் அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று பல குழப்பம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் சென்னை அணியில் மட்டும் சில வீரர்களை மீண்டும் ஏலத்தில் கைப்பற்றியுள்ளது.

தொடக்க வீரர்கள் ; சென்னை அணி தொடக்க வீரர் என்று வந்தால் அதில் ருதுராஜ் கெய்க்வாட் தான் அனைவரின் மனதிலும் தோன்றும். ஆனால் அவருடன் கைகோர்க்க போகும் மற்ற வீரர் அதிகபட்ச வாய்ப்பு நியூஸிலாந்து அணியை சேர்ந்த டேவன் கான்வே தான். இந்த முறை இவர்களது பார்ட்னெர்ஷிப் எந்த அளவிற்கு இருக்க போகிறது என்பதை பார்க்க மக்கள் ஆவலாக இருக்கின்றனர்.

டாப் ஆர்டர்: ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு போன்ற இருவரும் நிச்சியமாக ப்ளேயிங் 11ல் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு சென்னை அணியில் விளையாடி வந்தனர். அதிலும் குறிப்பாக சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து வெளியேற்றபட்ட பிறகு அந்த இடத்திற்கு களமிறங்கினார் ராபின் உத்தப்பா.

ஆல் -ரவுண்டர்: ரவீந்திர ஜடேஜா, ப்ராவோ மற்றும் ஷிவம் துபே போன்ற வீரர்கள் உள்ளனர். அதிலும் இந்த ஆண்டு முதல் சென்னை அணியை வழிநடத்த போகும் வீரர் தான் ரவீந்திர ஜடேஜா. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் விளையாடி வருகிறார்.

ஷிவம் துபே இந்த ஆண்டு தான் முதல் முதலில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தா ராயல்ஸ் அணியில் விளையாடிய ஷிவம் 9 போட்டிகளில் 230 ரன்களை அடித்துள்ளார். அதேபோல பவுலிங் செய்த ஷிவம் எந்த விக்கெட்டையும் கைப்பற்றவில்லை.

விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மேன் : தல மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு முதல் சென்னை அணியில் வெறும் ப்ளேயராக விளையாட உள்ளார். தோனி கேப்டனாக இல்லாவிட்டாலும் அணியில் இடம்பெற்று நிச்சியமாக ரவீந்திர ஜடேஜாவுக்கு உறுதுணையாக இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பவுலர்: ஆடம் மில்னே , தேஷ்பாண்டே மற்றும் மிச்சேல் சண்ட்னர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. முதல் பாதி ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் முக்கியமான பவுலர் தீபக் சஹார் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு போலவே சென்னை அணி சிறப்பாக விளையாடி ரன்களை அடித்து கோப்பையை கைப்பற்றுமா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!