சதம் அடித்தும் இந்திய அணியில் வாய்ப்பு இல்லையா ? புலம்பும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்; முழு விவரம் இதோ ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் எதிரான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆமாம்..! இதுவரை நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்தது.

பின்னர் இதுவரை இரு டி-20 போட்டிகளும் நடந்து முடிந்துள்ளது. அந்த இரு போட்டிகளும் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது இந்திய. இன்று இரவு நடைபெற உள்ள இறுதி போட்டியில் ஆறுதல் வெற்றியை கைப்பற்றுமா வெஸ்ட் இண்டீஸ் அணி ?/

இதனை அடுத்து வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி-20 மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ அறிவித்தது. அதில் முக்கியமான சில வீரர்கள் டெஸ்ட் போட்டியில் இல்லாதது பலருக்கு ஆச்சரியமாக உள்ளது.

ஆமாம்..! இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான அணி என்றால் அதில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக நடைபெற்று முடிந்துள்ள டெஸ்ட் போட்டியில் அவர்கள் இருவரின் ஆட்டமும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

அதனால் வேறு வழியில்லாமல், ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரையும் ரஞ்சி கோப்பை போட்டியில் முதலில் விளையாட்டும் பின்னர் இந்திய அணியில் விளையாட்டும் என்று பிசிசிஐ தலைவர் கூறினார். அதனால் மும்பை அணியில் ரஹானே மற்றும் சுராஷ்டிர அணியில் புஜாராவும் விளையாடி வருகின்றனர்.

நேற்று இவர்கள் இரு அணிகளுக்கும் போட்டி தொடங்கியது. அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய ரஹானே 129 ரன்களை அடித்து தொம்சம் செய்தார். அதனால் 544 ரன்களை அடித்துள்ளது மும்பை.

பின்னர் முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடிய சௌராஷ்டிர 220 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதில் புஜாரா எந்த ரன்களை அடிக்காமல் டக் அவுட் ஆனார். அவரது முழு திறமையும் வெளிப்படுத்திய ரஹானே இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரஹானே இடம்பெறாதது அதிர்ச்சியாக தான் உள்ளது. அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விராட்கோலி-க்கு பதிலாக ரஹானே தான் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணி இதோ ;

மயங்கே அகர்வால், ரோஹித் சர்மா, ப்ரியன்க் பஞ்சல், விராட்கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுமன் கில், ரிஷாப் பண்ட், பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் சவுரப் குமார்.