நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணியில் களமிறங்கிய ஆல் ரவுண்டர் ; உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள் ;

இந்த கொரோனா காலத்திலும் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து போட்டிகளில் விளையாடி கொண்டே வருகின்றனர். இன்றுடன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் நிறைவடைய உள்ளது. இதனை அடுத்து வெறும் நான்கு நாட்கள் கழித்து இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி-20 மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய.

அதற்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் சில முக்கியமான வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். அதில் ஒருவர் தான் ஆல் -ரவுண்டரான ஜடேஜா. கடந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு எந்த விதமான போட்டிகளிலும் விளையாடவில்லை.

அதற்கு முக்கியமான காரணமே காயம் தான். ஆமாம்..! அதனால் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் இந்திய அணியில் மிடில் ஆர்டர் மிகவும் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை.

சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கூறுகையில் ; இந்திய அணியில் ஹர்டிக் பாண்டிய மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் இந்திய அணியில் இணைந்த பிறகு நிச்சியமாக நல்ல டெப்த் இருக்கும் என்று கூறினார்.

அதில் ஹர்டிக் பாண்டிய இன்னும் அணியில் திரும்பாத நிலையில் ரவீந்திர ஜடேஜா இந்த முறை அணியில் இடம்பெற்றது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இப்பொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷாப் பண்ட் -க்கு பிறகு பினிஷராக களமிறங்க வேறு ஆல் இல்லை.

ஆனால் ரவீந்திர ஜடேஜா முக்கியமான மிடில் ஆர்டரில் பவுலிங் செய்து முக்கியமான விக்கெட்டை கைப்பற்றுவது மட்டுமின்றி இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்துள்ளார். அதனால் இந்திய அணியின் முக்கியமான வீரராக ரவீந்திர ஜடேஜா திகழ்ந்து வருகிறார்.

கடந்த 2009ஆம் இந்திய அணியில் அறிமுகம் ஆன ரவீந்திர ஜடேஜா, இதுவரை 56 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2145 ரன்களை அடித்துள்ளார். அதில் 223 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். 50 டி-20 போட்டிகளில் விளையாடி 217 ரன்களை அடித்து 39 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். 168 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2411 ரன்களை அடித்து 188 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ஜடேஜா.

இந்திய கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜாவின் விளையாட்டு எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள கமெண்ட்ஸ் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!