இதற்கு மேல் இவரை சிஎஸ்கே அணியில் வைத்திருப்பது சரியா ? ; அவரை ப்ளேயிங் 11ல் இருந்து விலகிவிடுவாரா தோனி ? முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2021; அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற 47வது போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதினர். அதில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கத்தில் சரியான ஆட்டம் அமையவில்லை. ஆனால் 10 ஓவருக்கு பின்பு அதிரடியாக விளையாடி ரன்களை விளாசினர். அதிலும் குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்து சிஎஸ்கே அணியின் அதிக ரன்களை அடிக்க காரணமாக இருந்துள்ளார்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 189 ரன்களை கைப்பற்றினார்கள். அதன்பின்னர் 190 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இமாலய இலக்கு என்று நினைத்தால் 17.3 ஓவர் முடிவில் வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

அதனால் புள்ளிபட்டியலில் 6வது இடத்தில் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ், அதுமட்டுமின்றி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு இன்னும் உள்ளது. இதற்கிடையே சிஎஸ்கே அணியில் இவர் இருப்பது உபயோகமாக இல்லையா ? யார் அந்த வீரர் ?

சுரேஷ் ரெய்னா தான் அந்த வீரர். கடந்த ஆண்டு ஐபிஎல் 2020ல் சில பிரச்சனை காரணமாக விளையாடவில்லை. ஆனால் இந்த ஆண்டும் அவர் அணியில் இடம்பெற்று முதல் பாதி விளையாட்டில் அதிரடியாக விளையாடினார் சுரேஷ் ரெய்னா.

ஆனால் இப்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தில் சற்று நிதானமான ஆட்டத்தை மட்டுமே காட்டி வருகிறார் சுரேஷ் ரெய்னா. ஆனால் மிடில் ஆர்டரில் இவரது ஆட்டம் சரியாகி இல்லை என்று தான் சொல்லவேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

சுரேஷ் ரைனா நிச்சியமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அணியில் இருக்கும் வீரர்கள் நினைத்து கொண்டு வருகின்றனர். ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக நடந்துள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 160 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 54 ரன்களை கைப்பற்றினார்.