CSK அணியால் Mumbai அணிக்கு Play-off சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு குறைந்து விட்டது ; முழு விவரம் ;

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 13 சீசன் போட்டிகள் முடிந்து, இப்பொழுது 14வது சீசன் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் தான் அதிகப்படியாக ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினமான சூழ்நிலையில் தான் உள்ளது.

அதுவும் நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 189 ரன்களை அடித்தனர். பின்பு 190 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 17.3 ஓவர் முடிவில் அதிரடியாக விளையாடி 190 ரன்களை விளாசி வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றியால் எப்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு குறைவாக இருக்கும் ??

ஏனென்றால் நேற்றைய போட்டிக்கு முன்பு வரை மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்ற பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி 7வது இடத்துக்கு சென்றது.

ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி பெற்றிருந்தால் நிச்சியமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆறுதலாக தான் இருந்திருக்கும். அதனால் முன்பை இந்தியன்ஸ் அணிக்கு இப்பொழுது கடினமான போட்டி எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

இன்னும் மீதம் 2 போட்டிகள் உள்ளது மும்பை அணிக்கு, அதில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு இருக்கும். ஆனால் இன்னும் இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

அதில் வெற்றிபெறுமா? அதிலும் முக்கியமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவேளை இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றிவிடும். இதுவரை யாரும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை கோப்பையை வெற்றிபெற்றதில்லை….!