நீங்க என்ன சொன்னாலும் சிஎஸ்கே அணிக்கு இவர் முக்கியம் தான்…. வேற வழியே இல்லை..இவரை விட்ட….. யார் அந்த வீரர் ??
நேற்று நடந்த ஐபிஎல் 2021வது இரண்டாவது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதினர். டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை எடுத்தனர்.
பின்பு 189 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ப்ரித்வி ஷா மற்றும் தவான் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி எடுத்துள்ளனர். அதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.4ஓவரில் 190 ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. வெற்றியை கைப்பற்றிய டெல்லி அணி புள்ளிப்பட்டியளில் முதல் இடத்திலும்.
தொற்று போன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி இடத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ???
நீங்க என்ன சொன்னாலும் சிஎஸ்கே அணிக்கு இவர் முக்கியம் தான்…. வேற வழியே இல்லை..இவரை விட்ட….. யார் அந்த வீரர் ??
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் சரி.. ஆனால் ரெய்னா கண்டிப்பாக இன்னும் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய கிரிக்கெட் நாயகன் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் ரெய்னா அவரது சொந்த பிரச்சனை காரணமாக அவர் ஐபிஎல் 2020யில் விளையாட முடியாமல் போய்விட்டது.
அதன்விளைவாக கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் சிஎஸ்கே அணி பல தோல்விகளை சந்தித்துள்ளது. அதன்விளைவாக கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் போய்விட்டது.
சுரேஷ் ரெய்னாவின் நேற்றைய ஆட்டம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி அதிரடியாக விளையாடிய ரெய்னா ஜடாஜேவின் சிறிது கவன குறைவால் ரன்-அவுட் ஆனார் ரெய்னா. அதுமட்டுமின்றி அவர் கிட்டத்தட்ட 600 நாட்களுக்கு மேல் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை.
இருந்தாலும் அவரது முயற்சியால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரெய்னா. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனிக்கு பின்னர் ரெய்னா சிறிது ஆண்டு வழிநடத்த வேண்டும் என்று ரசிகர்கள் அவரவர் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.