ஜடேஜாவிற்கு பதிலாக இவர் தான் கேப்டனாக இருந்த்திருக்க வேண்டும் ; CSK அணி செய்த மிகப்பெரிய தவறு இதுதான் ;

ஐபிஎல் டி-20 லெக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 20 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

நாளை இரவு 7:30 மணியளவில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளனர். இதுவரை பெங்களூர் அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ளனர்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய அனைத்து’போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது சென்னை. இதில் இருந்து மீண்டு எழுமா ? சென்னை அணி ? ஆமாம் .. இன்னும் நடக்க உள்ள சில போட்டிகளில் நிச்சியமாக சென்னை அணி வென்றே ஆக வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஜடேஜா தலைமையிலான சென்னை அணி மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருகிறது தான் உண்மை. ஒருவேளை ரவீந்தர ஜடேஜா சரியாக அணியை வழிநடத்த முடியவில்லை என்பதாக இருக்குமோ என்று பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் : “சென்னை அணியின் இவரை அணியில் இருந்து வெளியேற்றி தவறு செய்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். “

“அதனால் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலக போகிறார் என்ற தெரிந்திருந்தால் நிச்சியமாக டூப்ளஸிஸ் ஐ-அணியில் இருந்து வெளியேற்றிக்க கூடாது. ஒருவேளை டூப்ளஸிஸ் அணியில் இடம்பெற்றிருந்தால் நிச்சயமாக ஜடேஜா-வால் சுதந்திரமாக விளையாட முடியும்….!”

“ஜடேஜா நிச்சியமாக அவரது விளையாட்டில் கவனமாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.இருப்பினும் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.” என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

ராய் சாஸ்திர சொன்னது போல, தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டூப்ளஸிஸ் சென்னை அணியில் இருந்து விலகியது ,தவறா ?? ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை பெற்றதிற்கு முக்கியமான காரணம் என்ன ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்ணுங்க..!