ராகுல் டிராவிட் இதை கவனிக்க வேண்டும், இல்லையென்றால் கஷ்டமாக மாறிவிடும் ; ராகுல் டிராவிட்-க்கு அட்வைஸ் கொடுத்த ரவி சாஸ்திரி ; முழு விவரம் இதோ ;

0

ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுள்ளார். உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு நடைபெற்று நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து பணியாற்ற தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தன. அதிலும் குறிப்பாக சொல்லவே வேண்டுமென்றால் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியால் வெல்லவே முடியவே இல்லை. 0 – 3 என்ற கணக்கில் இந்திய அணியை வாஷ்அவுட் செய்தது தென்னாபிரிக்கா அணி.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார்கள். அதுமட்டுமின்றி, ப்ளேயிங் 11ல் எந்த எந்த வீரரை வைக்கவேண்டும் என்பதை ராகுல் டிராவிட் சரியாக முடிவு செய்யவில்லை என்று கருத்துக்கள் பல எழுந்து வருகின்றன. அதுவும் சரிதான், சமீபத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய நிறைய சதம் அடித்துள்ளார்.

ஆனால் இந்திய அணியில் இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் -க்கு திறமை இருந்தும் ப்ளேயிங்-11ல் வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஏன் ? ஒருவேளை தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிருந்தால் இந்திய அணி வெற்றிபெற்றிக்காக அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும்.

இதனை பற்றிய பேசிய இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த பேட்டியில் ; இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்-கு சில அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில் ” இப்பொழுது இருக்கும் காலம் இந்திய அணியின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்று.

இன்னும் சில மாதங்களில் அணியில் இருக்கும் வீரர்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் யார் திறமையான வீரர், யாரை எந்த இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்பதை பற்றி யோசிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தேர்வு செய்யப்போகும் வீரர்கள் குறைந்தது 4-5 ஆண்டுகள் விளையாட வேண்டும்.

நிச்சயமாக அப்படி தேர்வு நேரங்கள் வரும்போது இந்திய அணியில் சில இளம் வீரர்கள் மற்றும் சில அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்ற அடிப்படையில் தான் இருக்கும். எப்பொழுது ஒரே அணியை வைத்துக்கொண்டு விளையாட முடியாது. எதிர்காலத்தை மனதில் கொண்டு மாற்றங்கள் செய்ய வேண்டும்.

ஒரே அணியை வைத்துக்கொண்டு விளையாடி வந்தால், பின்னர் வீரர்களை மாற்றுவதில் சிக்கல் ஏற்படும்.அதனால் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகம் இதனை மனதில் வைத்துக்கொண்டு முடிவுகளை கையில் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here