விராட், ரோஹித் இல்லை ; நான் இந்த ஐபிஎல் அணியில் விளையாட ஆர்வகமாக உள்ளேன் ; அதுவும் இவருடைய கேப்டன்ஷி-யில் விளையாட வேண்டும் ; ஹர்ஷல் பட்டேல் ஓபன் டாக்

0

ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 போட்டிக்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி அன்று பெங்களுரில் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி,இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் புதிதாக லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றதே இல்லை. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு ஐபிஎல் இரண்டாம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும்போது நான் கேப்டன் பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார் விராட்கோலி.

அதுமட்டுமின்றி, பெங்களூர் அணி விராட்கோலி 15 கோடி, மேக்ஸ்வெல் 11 மற்றும் முகமது சிராஜ் 7 கோடிக்கு அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் அதிகபடியான விக்கெட்டை கைப்பற்றிய வீரராக திகழ்ந்தார் ஹர்ஷல் பட்டேல்.

ஆனால் இவரை பெங்களூர் அணி தக்கவைத்துக்கொள்ளவில்லை. ஐபிஎல் 2021 மொத்தம் 15 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இருந்தாலும் ஏன் இவரை தக்கவைக்கவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன. அதுமட்டுமின்றி ஐபிஎல் 2022 ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவார் என்று தான் தெரிகிறது.

சமீபத்தில் பேட்டி அளித்த ஹர்ஷல் பட்டேல், எனக்கு இந்த அணியில் தான் நான் விளையாட ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் அணியை பற்றி அவர் கூறுகையில் ; எனக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக வழிநடத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் விளையாட ஆசைப்படுகிறேன்.

யார் சிறந்த கேப்டன் என்ற கேள்விக்கு பதிலளித்த ஹர்ஷல் பட்டேல் ; உடனடியாக தோனி தான் என்று கூறியுள்ளார். ஐபிஎல் அணியை பற்றிய பேசிய ஹர்ஷல் ; நான் அணியில் தக்கவைக்கப்படவில்லை என்ற செய்தி வெளியான பிறகு , என்னை தொடர்பு கொண்டு இந்த முடிவு முழுவதும் அணியின் உரிமையாளர்கள் எடுத்த ஒன்று என்று கூறினார் மைக் ஹெஸ்ஸோன்.

ஆனால் அவர்களும் என்னை மீண்டும் அணியில் எடுத்து வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. அதேபோல தான் எனக்கும், ஆமாம்..! நானும் மறுபடியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட ஆசைப்படுகிறேன். ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி என்னுடைய வாழ்க்கையை மாற்றியுள்ளது தான் உண்மை என்று கூறியுள்ளார் ஹர்ஷல் பட்டேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here