பெங்களூர் அணியில் இருந்து வெளியேறிய தொடக்க வீரர் ; அதிர்ச்சியில் ரசிகர்கள் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் தொடர் இந்தியாவில் அறிமுகம் ஆனது. அதில் இருந்து இதுவரை வெற்றிகரமாக ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து 15 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் 16வது சீசன் நடைபெற்று கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, மூன்று ஆண்டுகள் கழித்து அனைத்து அணிகளும் அவரவர் ஹாம் மைதானத்தில் நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மேலும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது ஐபிஎல் டி-20 லீக் போட்டி.

ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான வீரர்களை வைத்து கொண்டும் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாத நிலையில் உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

ஆமாம், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. பின்பு கடந்த ஆண்டு 2022ல் இருந்து தென்னாபிரிக்கா வீரரான டூப்ளஸிஸ் தான் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

இந்த ஆண்டாவது கோப்பையை வெல்லுமா ? பெங்களூர் அணி :

இரு தினங்களுக்கு முன்பு மும்பை அணியை எதிர்கொண்டது பெங்களூர் கிரிக்கெட் அணி. அதில் டாஸ் வென்ற பெங்களூர் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 171 ரன்களை அடித்தனர்.

பின்பு, பெங்களூர் அணி அதிரடியாக விளையாடி 16.2 ஓவரில் 172 ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றுள்ளது பெங்களூர் அணி.

இருப்பினும், பெங்களூர் அணியின் தொடக்க வீரரான ரஜத் பட்டிடர் -க்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று பெங்களூர் அணி அறிவித்தது. ஆனால் சற்று முன்பு வெளியான தகவலின் படி ரஜத் பட்டிடர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் இனிவரும் போட்டிகளில் டூப்ளஸிஸ் மற்றும் விராட்கோலி ஆகிய இருவர் தான் தொடக்க வீரராக விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here