கூடிய விரைவில் இந்த பையன் இந்திய அணியில் விளையாடுவான் ; தமிழக வீரரை புகழ்ந்து பேசிய ஹர்டிக் பாண்டிய ;

0

ஐபிஎல் : உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 7 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை.

தொடக்க வீரர்களான பிருத்வி ஷாவ், மிச்சேல் மார்ஷ் போன்ற வீரர்கள் விக்கெட்டை இழந்த காரணத்தால் டெல்லி அணிக்கு பின்னடைவாக மாறியது. இருப்பினும், டேவிட் வார்னர், அக்சர் பட்டேல், அபிஷேக் போரல் போன்ற வீரர்கள் ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 162 ரன்களை அடித்தனர்.

பின்பு 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஆனால் தொடக்க வீரர்களான சஹா மற்றும் சுப்மன் கில் தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் குஜராத் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ஆனால் தமிழக வீரரான சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை விளாசினர். அதனால் 18.1 ஓவர் முடிவில் 163 ரன்களை அடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வென்றுள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்டிக் பாண்டிய : “முதலில் போட்டி தொடங்கும்போது நகைச்சுவையாக தான் இருந்தது. என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை, ஆனால் ஏதோ நடக்கும் என்று தெரியும். நாங்கள் (குஜராத்) பவர்-ப்ளே -வில் அதிக ரன்களை கொடுத்தோம். இருப்பினும் பவுலர்கள் அதனை சமாளித்து விளையாடினார்கள்.”

“நான் எப்பொழுது வீரர்களிடன் சொல்வது ஒன்று தான்,போட்டியில் எப்பொழுதும் Enjoy செய்து விளையாட வேண்டுமென்று. அப்பொழுதுதான் சரியான முடிவுகளை கையில் எடுக்க தோன்றும். ஒரு வீரரை மற்றொரு வீரர் பாத்துக்கொள்வது மிகவும் முக்கியமான விஷயம்.”

“உண்மையிலும் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடினார். அவரது பங்களிப்பு குஜராத் அணிக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. கடந்த 15 நாட்கள் அவர் எடுத்த முயற்சி தான் இன்றைய ஆட்டம். ஒருவேளை அவர் மட்டும் இதே போல சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக குஜராத் அணியின் நம்பிக்கை நாயகனாகவும், அது ஏன் .. இந்திய அணியிலும் விளையாடுவார் என்று கூறியுள்ளார் குஜராத் டைட்டன்ஸ்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here