சாத்தியமா இது எனக்கு நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

நேற்று காலை 9:30 மணியளவில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டி மொஹாலி-யில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாமல் 30 ரன்கள் எடுத்த நிலையில் இரு வரும் ஆட்டம் இழந்தனர். ஆனால் பேட்டிங் செய்த அனைத்து வீரர்களும் குறைந்தது 40 ரன்களை அடித்த பிறகு தான் ஆட்டம் இழந்துள்ளனர்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டை இழந்து 357 ரன்களை அடித்துள்ளனர். அதில் மயங்க் அகர்வால் 33, ரோஹித் சர்மா 29, ஹனுமா விஹாரி 58, விராட்கோலி 45, ரிஷாப் பண்ட் 96, ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது ரவீந்திர ஜடேஜா 45 மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ரன்களை அடித்த நிலையில் விளையாடி வருகின்றனர்.

இந்த ரன்கள் நிச்சியமாக இலங்கை அணிக்கு சவாலாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி, இந்த டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் ஷர்மாவுக்கு முதல் டெஸ்ட் கேப்டனுக்கான போட்டி. பின்னர் முன்னாள் கேப்டனான விராட்கோலி-க்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும்.

இதனை பற்றிய பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா : நாங்கள் பேட்டிங் செய்ய முடிவு செய்தற்கு முக்கியமான காரணமே அதிக ரன்களை அடித்து எதிர் அணியை திணறடிக்கவேண்டும் என்பது தான். ஆனால் நான் சத்தியமாக இதனை நினைத்து கூட பார்த்தது இல்லை.

இந்திய அணியை வழிநடத்துவது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் பெருமையாக இருக்கிறது. இது முக்கியமான போட்டி தான், ஏனென்றால் பெரும்பாலும் எந்த வீரரும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது சுலபம் இல்லை. ஆனால் விராட்கோலி இன்று அவரது 100வது போட்டியில் விளையாட உள்ளார்.

அதனை பார்க்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா. இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து இப்பொழுது வரை 43 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.