இப்பொழுது மற்ற போட்டிகளுக்கு கிடைக்கும் மரியாதை கிரிக்கெட் போட்டிக்கும் கிடைக்க தொடங்கியது. அதுவும் இந்திய மக்களுக்கு கிரிக்கெட் போட்டி என்றால் அவ்வளவு பிடிக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மற்றும் பவுலிங் லெஜெண்ட் ஷேன் வார்னே இன்று இயற்கை எய்தினார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் தான் அவரது உயிர் போனதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.
ஷேன் வார்னே இன்று காலையில் அவரது வீட்டில் எந்த சுயநினைவும் இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பார்த்த போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தால் உயிர் இழந்ததாக கூறியுள்ளனர். ஷேன் வார்னே கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டி என்றால் இவரது சுழல் பந்து என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. இதுவரை ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் வார்னே. ஒரு பவுலராக மட்டுமின்றி அவ்வப்போது பேட்டிங் செய்தும் ரன்களை கைப்பற்றியுள்ளார் வார்னே.