தோனி மற்றும் ஜடேஜாவிற்கு சண்டைய ? இறுதி நேரத்தில் சென்னை அணிக்கு வந்த நெருக்கடி ;

0

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது தான் ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர். இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறையும், சென்னை அணி நான்கு முறையும், கொல்கத்தா அணி இரு முறையும் கோப்பையை வென்றுள்ளனர்.

இதனை அடுத்து ஐபிஎல் 2023 போட்டிகளின் லீக் போட்டிகள் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்துள்ளது. அதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ போன்ற நான்கு அணிகள் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இன்று இரவு 7 மணிக்கு தொடங்க இருக்கின்ற போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றனர். அதனால் இரு அணிகளும் பலத்த பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

தோனி மற்றும் ஜடேஜா ஆகிய இருவருக்கும் சண்டையா ?

இரு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் தொடர் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 223 ரன்களை அடித்தனர்.

பின்பு 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வெறும் 146 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. இதில் போட்டி முடிந்து செல்லும்போது தோனி மற்றும் ஆல் – ரவுண்டர் ஜடேஜா ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க : வீடியோ : பெங்களூர் அணியின் தோல்வியை கொண்டாடியதா ? மும்பை இந்தியன்ஸ் அணி ; என்ன ஒரு ஆனந்தம் ; காரணம் இதோ ;

அதனால் ஜடேஜா மேல் கை வைத்து பேசியனார் தோனி என்றும், கையை கீழே தள்ளிவிட்டு ஜடேஜா சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மகேந்திர சிங் தோனியிடம் சக வீரர்கள் கோவப்படுவார்களா ? ஏனென்றால், தோனி எப்பொழுதும் அமைதியாக விளையாடி வரும் தோனி எப்பொழுதும் நல்ல விஷயங்களை மட்டுமே கற்றுக்கொடுப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுமட்டுமின்றி, தோனி மற்றும் ஜடேஜா ஹியர் இருவரின் நட்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இது நிச்சயமாக வதந்தியாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இன்னும் ஜடேஜா மற்றும் தோனி ஆகிய இருவரிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here