இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2023 போட்டிக்கான ப்ளே – ஆஃப் சுற்றுகள் இன்று இரவு முதல் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியும் மோத உள்ளனர்.
இதற்கிடையில், இந்த ஆண்டும் தனது கோப்பைக்கு முற்றுப்புள்ளி வைத்தது பெங்களூர் அணி :
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் அணியும் மோதியது. இதில் பெங்களூர் அணி வெற்றி பெற்றிருந்தால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.
ஆனால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி அட்டகாசமாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 197 ரன்களை அடித்தனர். அதில் விராட்கோலி 100, டூப்ளஸிஸ் 28, மேக்ஸ்வெல் 11 ரன்களையும் அடித்துள்ளனர்.
பின்பு 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு வெற்றி காத்திருந்தது. ஆமாம், தொடக்க வீரரான சக பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இளம் வீரரான சுப்மன் கில் 104* ரன்களை விளாசினார்.
அதனால் 19.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 198 ரன்களை அடித்து பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. இதனால் பெங்களூர் அணியால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டுமென்று பெங்களூர் அணி அருமையாக விளையாடியது. ஆனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இதனை பற்றி பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூப்ளஸிஸ் கூறுகையில் : ” கடந்த ஆண்டு பெங்களூர் அணியில் தினேஷ் கார்த்திக்-ன் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிக போட்டிகளில் வெல்லும் அணியில் 5 அல்லது 6வது பேட்டிங் செய்யும் வீரர்கள் அதிரடியாக விளையாடி உள்ளனர் என்று கூறியுள்ளார் டூப்ளஸிஸ்.”