ரிஷாப் பண்ட் சொன்ன அந்த வார்த்தை தான் நான் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு முக்கியமான காரணம் ; வேகப்பந்து வீச்சாளர் பேட்டி

0

இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ளது ஐபிஎல் டி-20 2022 போட்டிகள். இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் மொத்தம் 10 அணிகளை கொண்டு விளையாட உளது ஐபிஎல் 2022. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது…!

இந்த முறை ஐபிஎல் 2022யில் லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அனைத்து வீரர்களும் அவரவர் அணியில் இணைந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆமாம், கடந்த 2020 டெல்லி கேபிட்டல்ஸ் அணி இறுதி போட்டி வரை முன்னேறி வந்தது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டை வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது. அதேபோல கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதல் இடத்தில் இருந்த காரணத்தால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இருப்பினும் சென்னை மற்றும் கொல்கத்தா அணியுடன் விளையாடி தோல்வியை சந்தித்த காரணத்தால் இறுதி போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் நிச்சியமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி சவாலாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார் ஆவேஷ் கான். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ; “ஐபிஎல் 2021 போட்டியை நான் எப்பொழுதும் மறக்கவே மாட்டேன். ஏனென்றால் அதில் நான் தான் அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளேன்.”

அதற்கு முன்னாள் நான் மூன்று ஆண்டுகளாக டெல்லி அணியில் தான் இருக்கிறேன். ஆனால் சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தால் என்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த இரு அணிகளில் மொத்தமாக 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளேன். கடந்த ஆண்டு ராபட , நோர்ட்ஜீ போன்றவீரர்கள் முதல் இரு போட்டிகளில் இல்லை.”

அதேபோல தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் எனக்கு வாய்ப்பு கொடுத்தனர். அப்பொழுது ரிக்கி பாண்டிங் மற்றும் ரிஷாப் பண்ட் போன்ற இருவரும் என்னை அதிகமாக நம்பினார்கள். அந்த நேரத்தில் ரிஷாப் பண்ட் என்னிடம் ” உனக்கு இந்த இரு போட்டிகள் தான் உள்ளன.”

அதில் நீ சிறப்பாக விளையாடி உன்னுடைய இடத்தை தக்கவைத்து கொள் என்று ரிஷாப் பண்ட் கூறியதாக ஆவேஷ் கான் கூறியுள்ளார்..! ஆவேஷ் கான் இதுவரை இந்திய அணியில் விளையாதே இல்லை. ஆனால் Uncap வீரர்கள் பட்டியலில் அதிகபட்சமாக 10 கோடி-க்கு விலை போன முதல் வீரர் ஆவேஷ் கான் என்பது குறிப்பிடத்தக்கது..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here