டெல்லி அணியை சூறையாடிய போது தோனியிடம் இதை தான் பேசினேன் ; ஆஸ்திரேலியா வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓபன் டாக் ;

0

நாளை மறுநாள் இரவு முதல் ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரு அணிகள் அறிமுகமாகியுள்ளது. அதனால் இந்த முறை மொத்தம் 10அணிகளை கொண்டு விளையாட உள்ளது.

ஐபிஎல் வீரர்களை அவரவர் அனுபவத்தை தெரிவித்து வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேனான மார்கஸ் ஸ்டோய்னிஸ் சென்னை அணி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் முதல் ப்ளே – ஆஃப் சுற்றில் களமிறங்கியது. அதில் தோனி 6 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்துள்ளார்.

இதனை பற்றி நான் தோனியிடம் பேசினேன். இந்த விஷயத்தை பற்றி பேசிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் கூறுகையில் ; டெல்லி அணியை இறுதி நேரத்தில் பயத்தை ஏற்படுத்தி வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார் தோனி. இதனை பற்றி நான் அவரிடம் (தோனி ) பேசினேன்.

அப்பொழுது தோனி ஒரு போட்டியை எப்படி பார்க்கிறார், எப்படி விளையாட வேண்டும், எப்படி நம்புடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல விஷயங்களை அவரிடம் நான் கேட்டு கொண்டேன். அதுமட்டுமின்றி, தோனி எப்படி ரிஸ்க் எடுக்கிறார் என்று கேட்டான்.

அதற்கு தோனி என்னிடம் ” அணியில் இருக்கும் வீரர்களிடம் நல்ல ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார் தோனி. மேலும் ஒவ்வொரு வீரர்கள் அவரவர் இஷ்டத்திற்கு விளையாடுவது வழக்கம். ஆனால் தோனி அதனை பொறுப்புடன் எடுத்து சிறப்பாக வழிநடத்துவார்.

எப்பொழுதும் தோனி பேட்டிங் செய்ய தொடங்கினால் போதும் போட்டி இன்னும் முடியவில்லை என்று கிரிக்கெட் ரசிகர்கள் நினைப்பது உண்டு. அது ஒரு கலை , மக்கள் தோனியை பற்றி யோசிப்பது. தோனியின் அமைதியை பற்றி பேசிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ;

“இப்பொழுது ஒரு போட்டி இறுதி கட்டத்தை நெருங்கும்போது நிச்சியமாக அனைத்து வீரர்களுக்கும் பதட்டம் ஏற்படுவது வழக்கம் தான். அப்பொழுது அனைத்து வீரர்களும் ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் தோனி எப்பொழுதும் ஒரே மாதிரி தான் இருப்பார். அதிலேயே தோனி வென்றுவிட்டார்.” என்று கூறியுள்ளார் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here