இந்திய அணியின் புதிய கேப்டனான ரோஹிட் சர்மா தீடீர் விலகல் ; காரணம் என்ன ?? முழு விவரம் இதோ ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கான தொடர் பொடியை தான். அதுவும் மூன்று டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாட உள்ளனர். அதிலும் முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26 ஆம் அன்று தென்னாபிரிக்கா நாட்டில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதில் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனான ரோஹித் சர்மா தீடீர் என்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு என்ன தான் ஆச்சு ?? ஏன் அவர் (ரோஹித் சர்மா ) டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை… !!

சமீபத்தில் தான் தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிமுகம் செய்தது இந்திய அணி. அதில் இருக்கும் வீரர்கள் மட்டும் மும்பையில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதில் எதிர்பாராத விதமாக ரோஹித் ஷர்மாவுக்கு கையில் அடிப்பட்டுவிட்டது.

ரோஹித் சர்மா கையில் ஏதோ பிரச்சனை உள்ளதாக மருத்துவ குழு தகவலை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது. அதிலும் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் சந்தேக நிலையில் தான் உள்ளனர். சமீபத்தில் தான் நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் விளையாடி.

அதில் 3 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் தொடரை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி. ரோஹித் சர்மா இல்லாமல் இந்திய அணி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியை கைப்பற்றுமா ??? ஒருவேளை ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டனாக இருந்திருந்தால் விளையாடி இருப்பாரோ …?? என்ற பல கேள்விகளை சமுகவலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றனர்.

ஐசிசி உலகக்கோப்பை டி20 2021 போட்டிகள் முடிந்த பிறகு டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலியே பதவி விலகினார். அதனால் ரோஹித் சர்மா அதன் பொறுப்பை ஏற்று சிறப்பாக வழிநடத்தி உள்ளார். பின்னர் இப்பொழுது பிசிசிஐ யின் தீடீர் முடிவால் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக இருந்த விராட்கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மா இடம்பெற வைத்தனர்.

இதனை பற்றி பேசிய கங்குலி ; இந்திய அணியின் தேர்வாளர்கள் இந்திய அணிக்கு டி20 போட்டிகளுக்கு ஒரு கேப்டன் மற்றும் ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன் என்று வைத்திருக்க முடியாது. அதனால் தான் நாங்கள் விராட்கோலியை ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக்கினோம் என்று கூறியுள்ளார். இந்திய அணிக்கு ரோஹித் சர்மா சிறந்த வீரரா அல்லது விராட்கோலி ஆ ?? உங்கள் கருத்துக்களை Comments ல் பதிவு செய்யுங்கள்…!!!