ரோஹிட் சர்மா இனிமேல் ஐபிஎல் கேப்டன் இல்லையா ? ஏன் இன்றைய போட்டியில் பொல்லார்ட் கேப்டன் ஆக இருந்தார் ; ரோஹித் ஷர்மாவுக்கு என்ன தான் ஆச்சு ?

ஐபிஎல் 2021 , மேட்ச் 30; நேற்று இரவு நடைபெற போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினார். அதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 156 ரன்களை அடித்துள்ளார். அதில் ருதுராஜ் 88 ரன்கள், ராயுடு, டுபலஸிஸ் மற்றும் மொயின் அலி ஆகிய மூவரும் எந்த ரன்களையும் அடிக்கவில்லை. ராயுடு 4 ரன்கள், தோனி 3 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள், ப்ராவோ 23 ரன்களை அடித்தனர்.

பின்பு 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் கலமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் இறுதிவரை போராடி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதில் டி காக் 17 ரன்கள், சிங் 16 ரன்கள், மனோஜ் திவாரி 50 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 3 ரன்கள், இஷான் கிஷான் 11 ரன்கள், பொல்லார்ட் 15 ரன்கள் மற்றும் குர்னல் பாண்டிய 4 ரன்களை அடித்துள்ளனர்.

வெற்றியை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியளில் முதல் இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் முன்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் . ஆனால் அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை ஏன்?

இதற்கு பதிலளித்த பொல்லார்ட் ; ரோஹித் சர்மா கூடிய விரைவில் அணியில் இணைந்து விடுவார். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். அவர் நான்காவது டெஸ்ட் போட்டி விளையாடும் போது அவரது காலில் சின்ன காயம் ஏற்பட்டது. அது இன்னும் சரியாகவில்லை, ஆனால் கூடிய விரைவில் அவர் அணியில் விளையாடுவார் என்று கூறியுள்ளார் பொல்லார்ட்.