ரோஹித் சர்மா என்னிடம் சொன்னது இதுதான்..! அதனால் தான் போட்டியே மாறியது ; புவனேஸ்வர் குமார் ஓபன் டாக் ;

நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டி. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டம் அமையவில்லை.

இருப்பினும் விராட்கோலியின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தது. அதிலும், விராட்கோலி ஆட்டம் இழந்த பிறகு ரிஷாப் பண்ட் அவரது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் அடித்துள்ளது.

அதில் ரோஹித் சர்மா 19, இஷான் கிஷான் 2, விராட்கோலி 52, சூர்யகுமார் யாதவ் 8, ரிஷாப் பண்ட் 52, வெங்கடேஷ் ஐயர் 33, ஹர்ஷல் பட்டேல் 1 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால் தோல்வியே மிஞ்சியது.

தொடக்கத்தில் சிறப்பாக ஆட்டம் அமையவில்லை என்றாலும், பூரான் மற்றும் போவெல் போன்ற இரு பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் இந்திய அணிக்கு ஆபத்து உருவானது. பூரான் விக்கெட்டை இழந்த பிறகு இந்திய அணிக்கு சிறிது ஆறுதலாக இருந்தது.

இறுதிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 178 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி. இதுவரை இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதால் தொடரையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் கொடுத்த பேட்டியில் ; நான் என்னை நம்பிக்கொண்டே விளையாடி வந்தேன். அதுமட்டுமின்றி இறுதி நேரத்தில் 9 அல்லது 10 ரன்களை கொடுத்தால் அது நம்ம அணி ஆபத்தாக அமையும் என்று.

அதனால் நான் முடிந்த வரை யாக்கர் பந்தை மட்டுமே தொடர்ந்து வீசிக்கொண்டு வந்தேன். அதிலும் எதிர் அணியின் பேட்ஸ்மேன் போவெல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அந்த நேரங்களில் யாக்கர் பவுலிங் கடினமான ஒன்று. அந்த நேரங்களில் விக்கெட்டை கைப்பற்றினால் மட்டுமே வெற்றியை கைப்பற்ற முடியும்.