ராகுல் இல்லை ; நானும் இவரும் தான் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்ய போறோம் ; ரோஹித் சர்மா பேட்டி

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது.

அதில் ரோஹட் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளனர். அதில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். சமீபத்தில் தான் 18 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இதற்கிடையில், இந்திய அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதிலும் ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற மூன்று வீரர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் யார் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோஹித் ஷர்மாவுடன் களமிறங்க போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆமாம்… ! ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவனுக்கும், இளம் வீரரான ருதுராஜ் தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், சில போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடிய கே.எல்.ராகுல் சரியாக விளையாடவில்லை. அதுவும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சொல்லும் அளவுக்கு ரன்களை அடிக்கவில்லை. அதனால் அவருக்கு பதிலாக சிறப்பான ஒரு வீரர் இருக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தால் அவருக்கு பதிலாக இஷான் கிஷான் மற்றும் மயங்க் அகர்வால் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். இப்பொழுது இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் ; இஷான் கிஷான் மட்டும் தான் ஒரே வாய்ப்பு வேற வழியில்லை. அவர் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க போகிறார்.

மயங்க் அகர்வால் இப்பொழுது தான் இந்திய அணியில் இணைந்துள்ளார். அவர் இன்னும் சில நாட்கள் தனிமையாக இருக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய இஷான் கிஷான் ஐபிஎல் டி20 போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை விளையாடியுள்ளார். ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்றும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.